Wednesday, October 1, 2008

இனிய ரமழான் வாழ்த்துக்கள்.

இன்று ரமழான் நோன்பு பெருநாளைக் கொண்டாடும்
அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கம் எமது
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Sunday, September 21, 2008

எளிமையான வாழ்க்கை வாழ்வோம்....!!!


நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்கள் வாழ வேண்டும்
என்று நினைப்பது உத்தமமான எண்ணம். அதேநேரம் ஆசையை
வளர்த்துக்கொண்டு போனால் ஆத்ம அபிவிருத்தி என்பதே இல்லாமல்
போய் விடும்.
சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி.
எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ அவ்வளவு
எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
விடயம்.
வயிற்றுக்கு உணவு ,மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளிய வீடு
இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும் பெறவேண்டும்.
இதற்கு மேல் ஆசை மேல் ஆசை தேவைக்கு மேல் தேவை என்று பறக்க
வேண்டியதில்லை.
நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்கு செய்யும்
மிகப்பெரிய பரோபகாரம்.
கிணற்றில்நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதி்ல்லை.
ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை
நம்மால் உணர முடிகின்றது.
எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரிய மரங்களை தண்ணீரில்
போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல்
நம்மை துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம் எனம் தண்ணீரில் ஆழந்து
விட வேண்டும்.
அப்போது துன்ப விடயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத்
தொடுவதே இல்லை.
நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரம லேசாகிவிடும்.

Sunday, September 14, 2008

விண்ணுயரப் பறந்த நட்பு....!!!

கிஞ்சித்தும் இரங்காமல்
வஞ்சித்து விட்டாய் - நீ
கெஞ்சிக் கேட்கிறேன்
தண்டித்து விடாதே...!

கண்ணிமைக்கும் நேரத்தில்
கருத்தோடிப் போனது
விண்ணுயரப் பறந்த நட்பு
வீணாகிப் போனது....!

விண்ணனானேன் உன்னால்
விரும்பிய துறையினில்
நன்றி உனக்கு சொல்வேன்
நாள் தோறும் என்வாயால்....!

கெட்டவனைத் தேடிய தர்மனுக்கும்
நல்லவனைத் தேடிய துரியோதனனுக்கும்
கடைசியி்ல் கிடைத்த பதில்
யாருமில்லை என்பது தான்....!

அவரவர் சிந்தனையோட்டத்திலேயே
கருத்துக்களை புரிந்து கொள்வர்
நல்லதாய் நினைத்தால் நல்லது
கெட்டதாய் நினைத்தால் கெட்டது....!

சந்தேகம் என்பது
செருப்பில் தைத்த முள் போல
எடுக்காது விட்டால்
குத்திக்கொண்டே இருக்கும் ....!

எடுத்துவிடு சந்தேகத்தை...!
தவிர்த்துவிடு தாழ்வு மனப்பான்மையை....!!
வளர்த்துவிடு சந்தோசத்தை.....!!!
கொடுத்துவிடு நட்புக்கு இலக்கணத்தை......!!!!

Friday, September 12, 2008

ஓணம் வாழ்த்துக்கள்...!!!




ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் உலகில் வாழும் மலையாளி
உறவுகளுக்கு எமது உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

Tuesday, September 9, 2008

உறவுகளை மேம்படுத்திக் கொள்ள.....!!!


குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில்
விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும்
பெரிதாகாமலும் இருப்பதற்கு...

** நானே பெரியவன், நானே நிறத்தவன் என்ற அகந்தையை (Ego)
விட்டொழியுங்கள்

** அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்
கொண்டே இருப்பதை தவிர்த்து விடுங்கள்.

** எந்த விசயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காக
கையாளுங்கள் (Diplomacy). விட்டுக்கொடுங்கள்(Compromise).

** சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான்
ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

** எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும் அவர்கள் சம்பந்தம்
உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

** உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்
கொஞசம் தளர்த்திக் கொள்ளுங்கள்(Flexibility).

** மற்றவர்களுக்குரிய மரியாதையை கொடுக்கவும், இனிய
இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்(courtesy).

** புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை
சொல்லவும் கூட நேரமில்லாதாது போல் நடந்து
கொள்ளாதீர்கள்.

இந்தக் கட்டளைகளின் படி நடந்தால் உறவுகள் நிச்சயமாக
மேம்படும்.

Thursday, September 4, 2008

Tuesday, September 2, 2008

எதிரியை விட துரோகியே ஆபத்தானவன்....!!!

சகுனி வேலைகளில் தேர்ச்சி பெற்றவர்
சந்தர்ப்பத்ததிற்கேற்ப கதைகள் புனைந்து
குசினி வேலைகளில் தம் திறமை காட்டி
கூட இருந்தே குழி பறிப்பர்....!

நண்பர்கள் மத்தியில சச்சரவுண்டாக்கி
பண்பர்கள் போலே நடந்து கொள்வர்
வீண்பழி சுமத்தி கீழே வீழ்த்துவர்
துரோகிகள் சேர்ந்து தாழ்ந்து தூற்றுவர்..!

முன்னுக்கு நல்ல பிள்ளையாட்டம்
பின்னுக்கு கள்ள சீட்டாட்டம்..!

வழிய வழிய சிரித்துப் பேசி
அழிய வைப்பர் எமையெல்லாம்
கழிய இவர் துன்பமெல்லாம்
தனிய செல்ல வேண்டும் நாம்....!

தன்வேலை முடியும் வரை அண்ணன் என்பர்
பின் வேலை முடிந்ததும் மடையன் என்பர்
கிறுக்கன் இவனையெல்லாம்
முருக்கங்காய் போலே சப்பித்துப்ப வேணும்...!

குறுக்கு வழியிலே காரியம் பார்தது
நறுக்குவர் நல்லவர் நரம்பையெல்லாம்
வெறுத்து ஒதுக்குவர் பெரியோரெல்லாம்
சிறுத்து சிதறும் பாதித்தவர் உள்ளம்...!

மனச்சாட்சி என்பது உளச்சாட்சி
மற்றவன் சொல்வது பஞசாயத்து
உனது சாட்சிக்கு நீ கட்டுப்பட்டால்
திருந்தலாம் உலகில் நல்லவனாய்....!

பொறாமை கொண்டு மற்றவனை வீழ்த்தி
அடையும் லாபம் ஒன்றுமில்லை.
போட்டி போட்டு நீயும் செய்
பொறாமைப்பட்டு குழி பறிக்காதே...!

ஒன்று சொல்கிறேன் கவனமாக கேள்
நன்று செய்தால் நலமுடன் வாழ்வாய்
வென்று வருவாய் உலகை எல்லாம்
இல்லையேல்
நரகத்தை உண்ணும் பன்றி போலே
பரலோகத்தில் வாழ்வதை விட
மரித்துப்போ மற்றவர் நலம் வாழ....!!!

Monday, August 25, 2008

ஆசி வழங்கிடு ....!!!

வள்ளி தெய்வானையுடன்
பள்ளி கொள்ளும் முருகா..,
துள்ளி எழுந்து வா - பகைக்கு
கொள்ளி எடுத்து வைக்க....!

சொந்த வீட்டை இழந்து
பந்த பாசங்களைப பிரிந்து
கந்தக வெளி தாண்டி
குந்தியிருக்கிறோம் தெருவோரம்...!

கொடிய அரக்கர்கள் - எம்மை
துடிக்கத் துடிக்க கொல்ல
வெடி வெடித்துக் கொண்டு
பிடித்து வருகிறார் எம் தேசத்தை....!

இளக்காரம் தமிழன் என்றெண்ணி
பலாத்காரம் பண்ணி, படை அனுப்பி,
ஆரவாரமாக, ஆர்ப்பாட்டம் பண்ணி,
பூதாகாரமாக செய்கிறார், படையெடுப்பு....!

ஓடி ஓடி ஓய்ந்து விட்டோம்,
தேடிப் பகை அழிக்க - நாம்
கூடி வருகின்றோம் எல்லைகளில்
ஆசி வழங்கிடு, தமிழன் வெற்றி பெற்றிட...!

புசிப்பதற்கு ஏதுமின்றி
பசி பட்டினியோடு - நாம்
தூஸி படிந்த தெருவினிலே
நாசி காய படுத்திருக்கிறோம்....!

காற்றுக் குடித்து பசியோடு காத்திருக்கிறோம் - எம்
சோற்றுக்கே உலை வைத்த கொடியவனுக்கு
வேற்று நாடு உனது என்று விளக்கம் சொல்லி,
சாற்றிட உலகுக்கு , எம் தேசம் வேறென்று.....!

வெயில் மழை அனைத்தும் தாங்கி ,
கையில் துப்பாக்கியோடு காத்திருக்கிறோம்
பையில் போட்டு பொட்டலமாக அனுப்பி
தையில் எம் சுதந்திரம் கொண்டாட....!!!

Sunday, August 24, 2008

பிஷ்னஸ் லேடி ஆனாள் வசிகரி...!!!

வீட்டில் வசிகரி ஒரே பெண் பிள்ளை.. அதை விட முத்தவளும் கூட..!
இரண்டு தம்பிகள். அன்பான அம்மா, பாசமான அப்பா. அனால் வசிகரி
அப்பாவின் செல்லம்...!

அம்மா அப்பா வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். வசிகரியும்
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் வெவ்வேறு நாடுகள்.

அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு நாடுகள் என்பதால், அவர்களது
வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து இருந்த காலங்கள் என்பதை விட
பிரிந்து இருந்த காலங்களே கூடுதலாக இருந்தது.

இருவரது நாடுகளும் விசா எனும் பெரும் சுவரால் தடுத்து
வைத்திருந்தது. இந்த விசா பிரச்சனைகளை தீர்த்து விடலாம்
என்றாலும், அதற்காக அலைந்து திரிந்து பெற்றுக் கொள்ளும்
வல்லமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஏன் பொறுமையை
பெற்றிருக்கவில்லை என்றே சொல்லலாம்.

இந்த இருவரும் வாழ்க்கையில் சேர்ந்து இருக்காததால், பிள்ளைகளுக்கு
சரியான பாசத்தை ஊட்டி வளர்க்க முடியவில்லை, அவர்களுடன்
ஒன்றாக இருந்து வாழ முடியவில்லை என்ற வருத்தம், ஏக்கம்
என்பன இருந்தே வந்தது.

நாம் படும் கஸ்ரம் போல் எமது பிள்ளைகளுக்கும் விட்டு வைக்காமல்
அவர்களையாவது விரைவில் திருமணம் செய்து கொடுத்து
சந்தோசமாக இருப்பதை பார்க்க வேண்டும் என்ற ஆசை, ஆர்வம்
அவர்கள் மனதில் எப்போதும் இருந்தது.

வசிகரியும் படித்து பெரிய பிள்ளையாகி கல்யாண வயதையும்
அடைந்து விட்டாள். தேனில் ஈ மொய்ப்பது போல், பெண் கேட்கத்
தொடக்கி விட்டார்கள் உறவினர்கள்.

தனது பிடிவாதம், செல்லங்களால், தான் இருபது வயதின் பின்னர்
தான் திருமணம் செய்வேன் என திட்டவட்டமாக சொல்லி விட்டு
வேலைக்காக அப்பாவின் நாட்டுக்குச் சென்று கொம்பனி ஒன்றில்
வேலைக்குஸ் சேர்ந்தாள் வசிகரி.

அந்த கொம்பனிக்கு பலரும் வருவார்கள், போவார்கள். அதில்
குமரன் என்பவன் மீது அவளுக்கு ஒரு விதமான அன்பு
ஏற்பட்டிருந்தது. அதனை அவனிடம் சொல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது மனம்
அவளுக்கு.

Saturday, August 23, 2008

நன்றி ..நன்றி ... நன்றி.....!!!

பிறந்த தினமென்று
மறந்து இருந்த வேளையில்
பறந்து வந்த உன் அழைப்பொலி
திறந்தது என் நினைவினை...!

உன்னிடம் பெற்ற வாழ்த்து
எனக்கு கிடைத்த முதல் வாழ்த்து.
உனக்கு நன்றி சொல்கிறேன்
சுணக்கம் இன்றி இப்போதே....!

வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும்
நன்றிகள் பலகோடி.
வாழ்க்கை போராட்டத்தில்
வெற்றி நடை போட்டு - அனைத்தும்
பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி
உங்களின் வாழ்த்துக்களிற்கும் ஆசிகளிற்கும்
மீண்டும் ஒருமுறை நன்றிகள்
பல சொல்லி விடை பெறுகின்றேன்
நன்றி ..நன்றி... நன்றி....!!!

Saturday, August 9, 2008

OLIMPICS 2008 BEIJING










Friday, August 8, 2008

வாய் திறந்து சொல்லு....!!!

இனிய காலை வணக்கம்,
தனிய சொன்னேன் உனக்கு
கனிய, உந்தன் மனம்...!

வளியில் பார்த்த உன்னை,
வழித்து எடுத்து வந்தேன்.
பழித்து விடாமல், பார்த்தவர் யாரும்..!

விழியாளின் முகத்தை
களித்துப் பார்த்து - தினமும்
விழித்து இருக்கிறேன் ....!

பழைய மரத்தில்,
தழைத்த குருத்துப் போல,
விளைந்த பயிர் நீ...!

சளைக்கவில்லை எனக்கு - உன்னை
வளைக்க நான் பட்ட பாட்டை ,
தழைக்க வைக்க எம் காதலை...!

உன் பொன்னான வாய் திறந்து,
என் உள்ளம் குளிரும் வரை சொல்லு,
"நான் உன்னை விரும்புகின்றேன்".....!!!

Sunday, August 3, 2008

விதி வசத்தால்....!

அன்புள்ளவளுக்கு..!

விதி வசத்தால், உனைப் பிரிந்து
வடிக்கிறேன் கண்ணீர்.
மறக்கவில்லை, நான் உன்னை ....,
என்றும் நீ, என்னவள் தான்...!
எனக்காக நீ, வடித்த கண்ணீர் - என்
என் இதயத்தில் விழுந்து, துடித்த
வேதனையை புரிந்து கொள்கிறேன் நான்.
என்னடி செய்வது, என்னவளே ..?
விதி வலியது. - நவீன
நாகரீகமே கொடியது.
புரிந்து கொள்வாய் எனை ,
உன் கண், கலங்காது காக்க
என் கோன் முருகனை வேண்டுகிறேன்.
காத்திரு அவளை கவனமாக ..!
பாத்திரு அவளை பத்திரமாக...!!

Sunday, July 20, 2008

நான் கொடுத்து வைத்தவள்.....!!!

கனக்க அன்பு காட்டும் கணவன் கிடைத்தது,
எனக்கு நிறையவே சந்தோசம்
மனத்தின் இறுக்கங்கள் குறைய,
அனைத்தும் சொல்கிறேன் அவனிடம்...!

வேசம் போடும் உறவுகள் மத்தியில் - குன்றாத
பாசம் காட்டும் என் குடும்பம், நண்பர்கள்....! - என்
தேசம் போய் தெருவோரம் நடந்தால்
தாகம் தீருமாப்போல் பறக்குது வேதனைகள்...!

குளித்து வந்ததும் என் முகத்தில்
பனித்து துளித்த தண்ணீர் சொட்டுக்களை,
களித்துப் பார்த்து, தலை துவட்டி,
அணைத்துக் கொடுக்கும் முத்தம் - எத்தனை
பணத்துக்கும் கிடைக்காது யாருக்கும்.....!

அண்ணி, அண்ணி என்று, வாய் நிறைய அழைத்து,
தண்ணி அருவியில் ஓடுமாப்போல், பாசம் கொட்டி - முழு
வெண்ணிலவு போல் என் மனதில் பதிந்து விட்ட
மண்ணின் மைந்தர்கள் என் மைத்துனர்கள்.....!

ஏங்கிய என், மனத்தின் பாசங்களுக்கு,
தாங்கிய ஒத்தடங்கள் போல் - கணவரிடம்
வாங்கிய முத்தங்களும், அணைப்புக்களும்,
தேங்கியே விட்டன, அகலாமல் மனத்திலே....!

கொடுத்து வைத்தவள் நான்..,
எடுத்து வைக்கிறேன், விளக்கு உனக்கு - முருகா
கரும்பு போல் இனிக்கிறது வாழ்க்கை,
வாழ்த்திடு எம்மை, என்றும் சீத்தாராமனாக வாழ்ந்திட...!!!

எழுதியவர் ; ஜெய்

Wednesday, July 16, 2008

மறக்க முடியவில்லை இன்னும்....!!!

தட்டித் தட்டி, தடுக்குப் பாயில் இருந்து,
சிட்டுச் சிட்டாய், நடக்கப் பழகி,
பட்டுப் பட்டாய் அம்மா சொல்லி,
சொட்டுச் சொட்டாய் வளர்ந்து வந்ததை
மறக்க முடியவில்லை இன்னும்...!

நேசறி போய் நேசம் பிடித்து,
'அ' 'ஆ' படித்து, முத்துமாரி ரீச்சரிடம்,
அன்புப் பரிசு வாங்கி - அவர்
உச்சி மோந்து, கொஞ்சி வாழ்த்தியதை,
மறக்க முடியவில்லை இன்னும்....!

ஆரம்ப பாடசாலையிலே,
அதிக மார்க் வாங்கியதால்,
பரிசளிப்பு விழாவில்,
பரிசு வாங்கி பாராட்டுப் பெற்றதை,
மறக்க முடியவில்லை இன்னும்.....!

எல்லாப் பாடத்திலும், நல்ல மார்க் எடுத்து,
சங்கீதத்தில், குறைந்த மார்க் எடுத்து,
யோகராணி ரீச்சரிடம் - மூங்கில்
பிரம்பால், வாங்கிக் கட்டிக் கொண்டதை
மறக்க முடியவில்லை இன்னும்.....!

விஞ்ஞானத்தில், இனப்பெருக்கத்தொகுதி பாடத்தை
படிப்பிக்க வெட்கப்பட்ட, சுபத்திரா ரீச்சரையும்,
தடியெடுத்து வந்து படிப்பித்த, ராதா ரீச்சரையும்,
படி, படி என்று ஆர்வமூட்டும், சபாபதி ரீச்சரையும்
மறக்க முடியவில்லை இன்னும்.....!

கல்லூரி சென்று, கணித பாடம் படித்து,
யோகானந்தா வாத்தியாரின்
விவேகமான விளக்கங்களால்,
படிப்பிலே மேலெழுந்து வந்ததை,
மறக்க முடியவில்லை இன்னும்....!

என் வகுப்பு தோழர்களே - என்னை,
என் பெயர் தவிர்த்து, சின்னவன் என்றழைத்து,
இன்ரவலில் எப்போதும், எனக்காக ஓசியில்
ரீயும், வடையும், வாங்கித்தந்து சாப்பிட்டதை
மறக்க முடியவில்லை இன்னும்....!

படை நடவடிக்கையால் - எம் படிப்பை
இடைநிறுத்தி, ஊரெல்லாம் இழந்து
நடையாக நடந்து, தண்ணீர் குடிப்பதற்காக
கடைக்கோடி வரை, தேடி அலைந்ததை.
மறக்க முடியவில்லை இன்னும்....!

இன்னும் எத்தனை, எத்தனையோ
சுகமான சுமைகளை, தாங்கி நிற்கும்,
என் ஆழ்மனச் சுகங்களை,
தினம் தினம் நினைத்து மகிழ்கிறேன்...!
எதையும் மறக்கவில்லை இன்னும்....!!!

Tuesday, July 15, 2008

மலரட்டும் சமாதானம்......!




வசந்த காலங்கள் இழந்து - இரு
தசாப்த காலங்களாக
பறக்கத் துடிக்கும் - தமிழ்
இதயத் துடிப்புக்கள் ஏராளம்....!

வதைக்கும் சிங்கள அரசு,
சிதைக்கும் தமிழர் ஓர்மத்தை.
சதைக்கு அலையும் துரோகிகள்,
விதைக்கும் நஞ்சை, இள நெஞ்சுகளில்...1

வேரோடு பிடுங்கியெறி, உன் கௌரவத்தை,
ஊரோடு பதுங்கியெழு, பட்டாளமாக,
காரோடு வந்த கயவன், காற்றோடு போவான்.
பாரோடு பேசு, உன் விடுதலையின் வீரத்தை.....!

நார் நாராக, தும்பு பறந்தது போதும்.
சேர் ஒன்றாக, தும்பெல்லாம் சேர்ந்து கயிறாக,
பார்.. விடுதலைக்காக, சுதந்திர இலக்கை,
பேர் சொல்லும் தமிழன் வீரத்தின் வெற்றியை...!

மறப்போம், எம்முள் பழையவற்றை,
பறப்போம், உலகினில் சுதந்திரமாக,
வெறுப்போம், பொறாமையால் புழுங்குவதை,
அறுப்போம், எதிரியின் கருந் திட்டங்களை..!

அன்னதானம் செய்வோம், ஏழை பசி அடங்க..
கண்தானம் செய்வோம், குருடன் பார்வை கிடைக்க..
ரத்ததானம் செய்வோம், தவிக்கும் உயிர் காக்க..
சமாதனம் செய்வோம், தமிழன் சுதந்திரம் அனுபவிக்க...!

புலரட்டும் புதிய பொழுது,
வளரட்டும் மக்களிடை ஒற்றுமை,
ஒளிரட்டும் சுதந்திர ஒளிக் கீற்று,
மலரட்டும் உலகினில் சமாதானம்...!!!

Sunday, July 13, 2008

சாந்திக்காக மண்டியிடு....!!!

பொங்கி வரும் கோபங்கள்,

தங்கிவிடும் நெஞ்சினிலே,
நெஞ்சினிலே தங்கி விட்டால்,
விஞ்சி விடும் விரக்திகள்...!

விரக்திகள் மிஞ்சி விட்டால்,
வெறுப்புக்கள் வந்து விடும்.
பொறுப்புகள், குறைந்து,
மறுப்புகள் கூடி விடும்....!

தேவையற்ற விடயங்களுக்கு,
கோபத்தை காட்டி விட்டால்,
தேவையான விடயங்களில் - அது
பயனற்றுப் போய் விடும்....!

உனது விடயங்களில் தலையிட்டால்,
அதில் நீ கோபப் பட்டால்,
சரியிலும் சரி.. தேவயும் கூட...,
தேவையற்ற விடயங்களில், விட்டு விடு..!

பாசம் காட்டி, பரவசமாய் வாழ்,
நாசம் செய்து, துவம்சமாய் ஆக்கிடாதே,
பாசத்தை நீ ,துவம்சம் செய்து விட்டால்,
வேசமாய் போய்விடும், வாழ்க்கையின் முழுவதும்....!

தேவையோ இந்த, வீணான பழியெல்லாம்..?
பாதை தெளிவாக, சுத்தமாக உள்ளது,
கரடு முரடையே, தேர்ந்தெடுக்கின்றாய்....,
விளைவு நிச்சயம், விபரீதமாகத்தான் இருக்கும்...!

பதற்றப் படாதே, பரவசப் படாதே..,
ஓரிடத்தில் நின்று, நிதானமாக யோசி,
எது சரி , எது பிழை என்பதை ...,
பாதி வெற்றி, அடைந்து விடுவாய் நிச்சயமாக....!

அனல் பறக்கும் - உன் கோபக்
கனல்களை, தாங்க முடியவில்லை..,
புனல் கொண்டு அழித்திடு - அது
தணல் ஆகுமுன் , உன் மனத்தில் இருந்து...!

கொட்டிவிடு, உனது துன்பங்களை வெளியில்,
கட்டிவிடு பந்தயம், மறக்க உன் கோபங்களை,
வெட்டிவிடு, துன்பங்களின் வருகையின் தொடக்கத்திலேயே.
மண்டியிடு மனத்திடம், என்றும் உன் மனச் சாந்திக்காக...!!!

Thursday, July 10, 2008

கனவாகவே போய்விட்ட கனவு.....!!!


முரளி ஒரு படித்த குடும்பத்தை சேர்ந்தவன்.
வீட்டில் ஐந்து சகோதரர்களுள் இவன் நடுப்பிள்ளை.
மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள். இவனுக்கு,
அக்கா, அண்ணா, தம்பி, தங்கை என எல்லா உறவு
முறைகளும் இருந்தன.

சிதம்பரப்பிள்ளை, முரளியின் அப்பா. சிறிய பாடசாலை
ஒன்றில் அதிபராக இருக்கிறார். அம்மா வீட்டுப்பணி,
அதனால் அம்மாவின் கட்டுப்பாட்டில் பிள்ளைகள் வளர்ந்தனர்.

சிதம்பரத்தாரின் மாதச்சம்பளமான பதினையாயிரம்
ரூபாவினை நம்பியே, அந்த குடும்பத்தின் ஏழு ஜீவன்களும்,
உணவு, உடை, படிப்புச் செலவு என அனைத்துத்
தேவைகளையும் நிறைவு செய்து வந்தார்கள்.

வீட்டில் மூத்தவன் எனும் வகையில் தர்சனும்,
மூத்தவள் எனும் வகையில் தர்சினியும்,
கடைக்குட்டி எனும் வகையில் சுதனும்,
இளையள் எனும் வகையில் சுதாவும்,
செல்லப்பிள்ளைகளாக இருந்தனர்.
முரளி மட்டும் நடுவில் பிறந்ததால், எடுபிடிப்
பிள்ளையாகப் போய் விட்டான்.

Wednesday, July 9, 2008

தேற்றிக்கொள் மனதை....!!!




மெய் மறைத்து, உன்மீது
பொய்ப் புகார்கள் செய்வார்கள்.
வாய் தவறியேனும் அவர்கள் மீது- நீ
நாய் போல் பாய்ந்து குதறி விடாதே...!

இல்லாத பொல்லாதவை எல்லாம் - எந்த
தள்ளாத வயதிலும், தளராது,
பல்லெல்லாம் இளித்துக் காட்டி,
சொல்லால் அடிப்பர், உனைப்பற்றி...!

இவையெல்லா, வற்றையும் பார்த்து,
அவையில் தளர்வாக இருந்து விடாதே.
கயவர் வீசும், ஒவ்வொரு சொல்லும் - உனை
உயர்த்தும் அத்திவாரக் கற்கள், நினைவிற்கொள்...!

காய்க்கிற மரத்துக்கு தான், கல்லெறி விழும் - அவரிடமிருந்து
பாய்கிற சொற்கள் உன் திறமைகளின் எண்ணிக்கைக்கு சமம்.
சாய்க்கிற நோக்கம் தான் உன் திறமைகளை..,
வேய்ந்த வீட்டுக்குள், நெல்மணி போல் பத்திரமாக காத்திடு...!

தற்காலிக பின்னடைவு தான் இது என்பதை
பிற்காலத்தில் புரிந்து கொள்வாய்.
முற்காலத்தில் நடந்தை யோசித்துப் பார்,
எக்காலத்திலும் வெற்றி உனக்குத் தான்....!

தேற்றிக் கொள் மனதை, பின்னடைவுகளில் இருந்து,
போற்றிக்கொள் தமிழ்த்தெய்வம், முருகனை என்றும்,
தொற்றிக்கொள் உன் மன வலிமையை மேலும் - பறை
சாற்றிக்கொள் வெற்றிகள் என்றென்றும் உனதென்று....!!!

Sunday, July 6, 2008

சேர்ந்திரு என்னுடன்...!!!

சங்கடங்கள், ஏனடி பெண்ணே..?
அந்தரங்கம், ஏதுமில்லை நமக்குள்,
அந்தரமின்றி, ஆறுதலாக வாடி - நீ
தந்த முத்தங்கள், இனிக்கிறது இப்போதும்...!

தாலி கட்டி உனை சொந்தமாக்கிட்டேன்,
வேலி போட்டு வைக்காதே - ஆசைகளுக்கு,
போலி ஆக்கிடாதே - என் இதயக் கனவுகளை,
கோலிக் கொடு, இரு பிள்ளைக் கனிகளை...!

சாவி வைத்து, அடக்கிப் பூட்டி,
பாவியாய், என்னை தவிக்க வைக்கிறாய்.
வாலி போல எனக்கு, தெரியாது கவியெழுத,
காலி தான் ஆக்கலாம், பல பியர் டின்களை..!

காதல் மகா ராணியாக்கி - என்
சாதல் வரை காத்திருப்பேன்.
மோதல் ஏதுமின்றி சேர்ந்திரு - என்
வாழல் காலம் வரையும்....!

கொடுத்திட்டேன், என்னுயிரை உன்னிடம்,
தடுத்திட்டேன், என் ஆணவம் திமிரெல்லாம்.
வெறுத்திட்டேன், எனக்கென்றிருந்த ஆசைகளை,
எடுத்திட்டேன் முடிவு, உனக்காக வாழ்வதென்று...!

தட்சணையாக, கொடுக்கிறேன் என்னை,
வஞ்சனையின்றி, கொடுத்திடு உன்னை,
பஞ்சணை மீது, கட்டி, எனை அணைத்து,
முத்தங்கள் கொடு, நான் முழுமையாக வாழ....!!!

Saturday, July 5, 2008

அலை ஆடை ஏனோ...??

உள்ளங்கை வரை, சுருங்கிய உலகினில்,
தொடை வரை சுருங்கிய, ஆடை அணிந்து,
படை எடுக்கும் பெண்களை - நீ
தடை விதிக்கச் சொல்லவா - இந்த,
அலை ஆடை அணிந்துள்ளாய்...?

அரை குறை, ஆடை அணிந்து,
அரை வரை, தெரியும் வகையில்,
தரையிலே, நடந்து வந்து,
சிதைக்கிறீர், எம் இளையவர் நெஞ்சை,
விதைக்கிறீர், அவர் நெஞ்சில் நஞ்சை..!

நாகரீக வளர்ச்சியில், இது அற்ப ஆசையாய்,
மேகமாய் சூழ்ந்துள்ள, ஒரு கொடிய நோய்,
வேகம் கொண்டு, பெற்றோர் திருத்தாவிட்டால்,
மோசமாகிவிடும், நாட்டில் குற்றங்களெல்லாம்,
நாசமாகிவிடும், இளையவரின் வருங்காலமெலாம்..!

ஒருவன், ஒன்றைச் செய்தால் - அதை
நீயும், செய்து காட்டு.
அதை விடுத்து, தடுக்க முயலாதே...
இது தான், கருத்துச் சுதந்திரமாம்...!

பிழையாக விளங்கிய சிலர் - இதை
சுளையாக பயன்படுத்தி, கெடுக்கின்றார்..
வளையாத, நற்குணம் கொண்டோரும்,
சளையாது இறங்குகின்றார், களத்தில்...!

"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது ..."
என்பது போல்
பெண்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால்,
நாட்டில் குற்றங்களை தடுக்க முடியாது...!!!