Saturday, May 31, 2008

அவனை விட்டு என்னால் இருக்கமுடியாது கடைசிவரை...!!!


முதன் முதலாய் நீ என்னை பார்த்தபோது,
பார்க்கவில்லை நான் உன்னை, வெட்கத்தில்.....!
என்னிடம் நீ பேசிய போது பேசவில்லை நான்,
தந்தியடித்தது என் நாக்கு.., தரவு ஏதுமின்றி....!

என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு..,
ரசித்துச் சொன்னாய்.. என் சமையலை.....!
"ருசித்துச் சாப்பிட்டேன், உன் கைராசிக்கு
குடுத்து வைச்சவன் யாரென்று......."!

கள்ளச் சிரிப்போடு கை காட்டிச் சென்றாய்..
சந்தோசப்பட்டேன் நான் சந்தேகத்துடன் காரணம் தெரியாமல்...!
தொலை பேசியில் தினம் கதைத்து வணக்கம் சொன்னாய்,
ரசித்தேன், ரசித்து குதித்தேன் துள்ளி.......!

அர்த்தம் என்ன இதுக்கு என்று
துடித்துக் கேட்டது என் இதயம்....!
உன் வாழ்வின் உதயம் காண
கேட்டுவிடு அவனிடம் அர்த்தத்தை....!

தேடினேன் நாளொன்று... தேர்ந்தெடுத்தேன் தீபாவளியை,
அழைத்தேன் அவனை, தேவன், தேவி கோயிலுக்கு...!

தேவனின் கோவிலில் தேடினேன் அவனை....
தேய்ந்தது என் மனம் காணவில்லை அவனை என்று...!
தேவியின் கோவிலில் கண் மூடி வேண்டினேன் - என்
தேவனைக் காட்டு இப்போதே... என் முன்னால்.....!

கண் விழித்து பார்த்த போது, கையில் பூமாலை தந்து
வீபூதியிட்டார் என் நெற்றியில், குருக்கள்....!
தேவியின் சம்மதத்துடன், அவன் தர்சனமும்
கிடைக்கும் என்றெண்ணி திரும்பினேன்.. கண்டேன் அவனை...!

முருகனின் முன்னால் நின்று
என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்....!
அவனது பார்வையை மறக்க முடியவில்லை எனக்கு...
நினைவிருக்கு.. இப்பவும் அந்த ஐப்பசி இருபத்தொன்றை....!

சாப்பிட நானழைத்து, அப்பாவும் நானும்
அவன் கூட சாப்பிட்டது, இட்லியும் தோசையும்...!
முடிந்ததும் எடுத்தான் போட்டோ.... எம்
அனுமதியுடன் அப்பாவையும்.., என்னையும்.....!

ஊர், பேர் விசாரித்து.., உறவுகள் விசாரித்து...,
பலப்படுத்திக் கொண்டோம், எமது உறவினை......!
டிசம்பர் ஒன்றில் சந்தித்து பகிர்ந்து கொண்டோம்,
எம் காதலை மென்மேலும்....!

விதைத்து, முழைத்து, வளர்ந்து விருட்சமாகி
இருக்கிறது.. எம் காதல், ஒன்றரை வருடமாக...!
அவனை விட்டு என்னால், இருக்க முடியாது,
கடைசிவரை.................!!!!!!

எழுதியவர் ; ஜெய்.

Wednesday, May 28, 2008

என் தங்கை சாவித்திரி


தாரணி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் மயூரன்.
அவளது அறிவும், அழகும், நல்ல குணமும், துடுக்குத்தனமான
செல்லக் கதைகளுமே, அவளை அவன் காதலிப்பதற்கான உந்து
சக்தியாக அமைந்திருந்தன.

தன் கணவன், தன் பிள்ளை, தன்குடும்பம் என்ற பெண்களுக்கே
உரித்தான சுயநலமான எண்ணங்கள் தாரணிக்கும் அமைந்திருந்ததில்
வியப்பேதுமில்லை...

மயூரன் பெரிய கொம்பனி ஒன்றில் மனேஜராக பணியாற்றி வந்தான்.
ஆண், பெண் என்ற வேறுபாடின்றி பலருடன் பழக வேண்டிய
சந்தர்ப்பம் அவனுக்கு. ஏனெனில் அவனது வேலை அப்படி
இருந்தது.

இந்த வகையில் சுவிஸ், சூரிச்சில் உள்ள சொக்லட் கொம்பனியின்
விற்பனை முகாமையாளராக பணியாற்றி வந்த சாவித்திரி என்பவருடன்
வேலை ரீதியாக தொடர்பேற்பட்டது.

அவளது அறிவு, துடுக்குத்தனமான பேச்சுக்கள், சிறந்த முடிவெடுக்கும்
திறன், தொடர்பு பேணுதல் என்று அவளிடம் அனைத்தும் நிரம்பவே
இருந்தன. இந்தத்தொடர்பு நட்பாக, அண்ணன் தங்கையாக வளர்ந்தது.


சாவித்திரியின் சிறு வயதிலேயே சோகங்கள், துன்பங்கள், என்பன
பலவாறாக பாய்ந்து காயப்படுத்தியிருந்தன. தன் துன்பங்களை
சொல்லி ஆறுதலடைய ஏங்கிய சாவித்திரிக்கு, தட்டுப்பட்ட பாசமலர்
தான் மயூரன்.

தினமும் வேலைக்குச் செல்வதற்க்கு முன்னர் மெயில் பண்ணி சுகம்
விசாரிப்பது, நேரம் கிடைக்கும் போது கதைப்பது என அவர்களது
நட்பு வளர்ந்து வந்தது.

வேலை விட்டு வீட்டுக்குச் சென்றதும் சாவித்திரியைப் பற்றி
தாரணியிடம் சொல்லி கவலைப்படுவதே அவனது வேலையாக
இருந்தது.

சாவித்திரியின் சோகங்கள், திறமைகள் அனைத்தையும் தாரணிக்கு
சொல்லி கவலைப்படுவான் மயூரன். அவளுக்கு அது பிடிக்கவில்லை
என்றாலும், வெளியில் காட்டிக்கொள்ளாது, "ம்" என்று சொல்லிக்
கொண்டிருந்தாள் தாரணி.

ஒரு நாள் வேலை விட்டு வரும் போது மின்குமிழ் (பல்ப்) ஒன்று
வாங்கி வருமாறு கூறியிருந்தாள் தாரணி. ஆனாலும் வேலைப்பளுவில்
மறந்து வாங்காமல் வந்து விட்டான் மயூரன்.

மின்குமிழ் வாங்காமல் வந்த்து கண்டு " நினைப்பு வீட்டின் மேல
இருந்தா தானே மறக்காம வாங்கி வருவதற்க்கு..." என குத்தல் கதை
போட்டாள்.

Monday, May 19, 2008

தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு


















சிறந்த எழுத்தாளனாகவும் ஒரு விடயத்தை விளங்கி
கிரகித்து
அதனை அப்படியே ஒப்புவிப்பதில் சிறந்தவனாகவும் விளங்கினான் ராகவன்.

ராகவன் ஒரு சர்வதேச அளவில் பிரபல்யமான கொம்பனி
ஒன்றில் அதிகாரியாக பணி புரிந்தான்.

அவன், அந்த அதிகாரி நிலையை அடைவதற்கு சாதகமாக
இருந்தவை என்று பார்த்தால், அவனது எழுத்து திறமை, கிரகித்தல் தன்மை
என்பதைக் காட்டிலும், மேலதிகாரிக்கு
துதி பாடுதல் என்பதே பொருத்தமாக இருந்திருக்கும் எனலாம்.

ஏனென்றால் அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சின்ன
விடயங்களும் அன்று பிற்பகல் மேலதிகாரிக்கு
தெரிந்திருக்கும்.
தேவையற்ற, சிறு சிறு விடயங்களையும், ஒன்றை பத்தாக
சொல்லி
பெரிது படுத்தி, சக அதிகாரிகளுக்கு ஆப்பு வைப்பதில் மன்னனாகவும் இருந்தான்.

இதனால் ராகவனுக்கு
" ஆப்பு மன்னன் " என்ற பட்டப்பெயரும்
இருந்தது அவனுக்கே தெரியாத விடயம்.
அவன், இருக்கும் இடத்தில் எல்லோரையும் நக்கலடித்து
மட்டம் தட்டி ரசிப்பதே அவனது பொழுது போக்காக,
ஏன்
வேலையாக இருந்தது என்று கூட சொல்லலாம்.

இளநிலை அதிகாரிகளின் திறமையும், துணிவும் அவனுக்கு
பயத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் திறமைகளைமேலதிகாரி கண்டு கொண்டால் தனது பதவிக்கு ஆபத்து
வந்து விடுமே என்று உள்ளூரவே பயந்தான் ராகவன்.
தன் கீழுள்ள இளநிலை அதிகாரிகளால் செய்யப்படும்
வேலைகளை தானே செய்ததாக கூறி மேலதிகாரியிடம்
நல்லபேர் வாங்குவது மட்டுமல்லாது, இளநிலை அதிகாரிகள்
மீது நல்ல அபிப்பிராயம் மேலதிகாரிக்கு
ஏற்பட்டு விடாதபடி கதைகளையும் சொல்லி வந்தான்.

அதே போல் வேலைகளில் ஏதாவது பிழை நடந்து விட்டால்
அதனை அவர்கள் மீது போல் எறிந்து தான் தப்பி விட்டு அவர்களுக்கு பேச்சு வாங்கி குடுப்பதும் ராகவனுக்கு கை வந்த கலையாக இருந்தது.

Monday, May 12, 2008

காதலின் உருவாக்கம், கருவறையினுடைய கருவிலே,


















கருவறையின் உள்ளே
குருவாக பிரகாசிக்கும்
வருங்கால உலகத்தின்
திருமுடி ராசாவே..........!

சுருண்டு, படுத்து
மருண்டு விழித்து
பாவை போல நீ
படுத்து உறங்குகின்றாய்...!

ஆண்மகனின் வீரியத்தில்
பெண்மகள் கர்ப்பமுற்று
உனைச்சுமந்து பத்துமாதம்
தனைக்கொடுத்து உனை படைத்தாள்....!

தன்னையே பணயம் வைத்து
பத்து மாதம் தவமிருந்து
சத்தாக உண்டு, ஊட்டி வளர்த்து,
பூப்போன்ற கரு உன்னை
பூமியிலே ஈன்றெடுத்தாள்
உருவாக........!

கருவிலே இருக்கும் நீ
வெளியிலே வருமுன்பே - உன்
கருவிலே காதல் ஜோடியை
உருவாக்கி வைத்துள்ளாய்....!

காதலின் உருவாக்கம்,
கருவறையினுடைய கருவிலே,
கருவினுடைய கருவறையிலே
உருவாகி விடுகின்றது.....!

காதலுக்கு மரியாதை கொடுத்து
சாதலுக்கு விடை கொடுங்கள்.
பாதம் தொட்டு தாயவளின்
பாசத்தை பெற்றிடுங்கள்.....!

Thursday, May 1, 2008

முத்தமொன்று நான் கொடுத்தேன்,

சித்திரையின் பத்திலே
முத்தமொன்று நான் கொடுத்தேன்,
சத்தமின்றி பெற்றுக்கொண்டாள்
முத்துமணி என் தேவதை.

அவள் தோளில் கை போட்டு
தலை வருடி, இறுக அணைத்து
இதழோடு இதழ் பதித்து
முத்தமொன்று நான் கொடுத்தேன்,
கொவ்வை பழம் போல் சிவக்கும் வரை......!

இதழ்களில் இருந்து கீழிறங்கி
முத்துக்கள் இரண்டிலும்
இச் என்ற சத்தத்துடன்
முத்தமொன்று நான் கொடுத்தேன்
முல்லையவள் வெட்கத்தில் சிரிக்கும் வரை......!

கட்டி அணைத்து, கட்டிலில்
முட்டி ப்போட்டு, முகம் புதைத்து
வெட்டிப்பயல் இவன் வெட்கமின்றி
முத்தமொன்று நான் கொடுத்தேன்
மூச்சிருக்கும் வரை நினைத்திருக்க.....!

வாழ்வெல்லாம் இனித்திருக்க
வாழ்வின் சுவை நாமறிய
காதல் வேர் ஆழ்ந்து ஓட,
முத்தமொன்று நான் கொடுத்தேன்
ரத்தமெல்லாம் கொதிக்கும் வரை......!

நெஞ்சமெல்லாம் துடி துடிக்க
அங்கமெல்லாம் அனலடிக்க
தூக்கமின்றி தவிக்கின்றேன் நான்
தமிழ் மகன் எனை தூக்கி
தாலாட்ட வாடி குட்டி
உன் முத்தமின்றி என்னால், முடியவில்லை
உலகத்தில் நிலைத்து வாழ்ந்திட......!