Sunday, August 24, 2008

பிஷ்னஸ் லேடி ஆனாள் வசிகரி...!!!

வீட்டில் வசிகரி ஒரே பெண் பிள்ளை.. அதை விட முத்தவளும் கூட..!
இரண்டு தம்பிகள். அன்பான அம்மா, பாசமான அப்பா. அனால் வசிகரி
அப்பாவின் செல்லம்...!

அம்மா அப்பா வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். வசிகரியும்
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் வெவ்வேறு நாடுகள்.

அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு நாடுகள் என்பதால், அவர்களது
வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து இருந்த காலங்கள் என்பதை விட
பிரிந்து இருந்த காலங்களே கூடுதலாக இருந்தது.

இருவரது நாடுகளும் விசா எனும் பெரும் சுவரால் தடுத்து
வைத்திருந்தது. இந்த விசா பிரச்சனைகளை தீர்த்து விடலாம்
என்றாலும், அதற்காக அலைந்து திரிந்து பெற்றுக் கொள்ளும்
வல்லமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஏன் பொறுமையை
பெற்றிருக்கவில்லை என்றே சொல்லலாம்.

இந்த இருவரும் வாழ்க்கையில் சேர்ந்து இருக்காததால், பிள்ளைகளுக்கு
சரியான பாசத்தை ஊட்டி வளர்க்க முடியவில்லை, அவர்களுடன்
ஒன்றாக இருந்து வாழ முடியவில்லை என்ற வருத்தம், ஏக்கம்
என்பன இருந்தே வந்தது.

நாம் படும் கஸ்ரம் போல் எமது பிள்ளைகளுக்கும் விட்டு வைக்காமல்
அவர்களையாவது விரைவில் திருமணம் செய்து கொடுத்து
சந்தோசமாக இருப்பதை பார்க்க வேண்டும் என்ற ஆசை, ஆர்வம்
அவர்கள் மனதில் எப்போதும் இருந்தது.

வசிகரியும் படித்து பெரிய பிள்ளையாகி கல்யாண வயதையும்
அடைந்து விட்டாள். தேனில் ஈ மொய்ப்பது போல், பெண் கேட்கத்
தொடக்கி விட்டார்கள் உறவினர்கள்.

தனது பிடிவாதம், செல்லங்களால், தான் இருபது வயதின் பின்னர்
தான் திருமணம் செய்வேன் என திட்டவட்டமாக சொல்லி விட்டு
வேலைக்காக அப்பாவின் நாட்டுக்குச் சென்று கொம்பனி ஒன்றில்
வேலைக்குஸ் சேர்ந்தாள் வசிகரி.

அந்த கொம்பனிக்கு பலரும் வருவார்கள், போவார்கள். அதில்
குமரன் என்பவன் மீது அவளுக்கு ஒரு விதமான அன்பு
ஏற்பட்டிருந்தது. அதனை அவனிடம் சொல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது மனம்
அவளுக்கு.

குமரனுக்கும் வசிகரியை பார்த்ததும் பிடித்துக் கொண்டாலும்
அவன் முதலாளிக்கு நண்பன் என்பதால் எதையும் சொல்லாமல்
இருந்து விட்டான்.

இருப்பினும் பண்டிகை நாளொன்றில் கோவிலில் எதேச்சையாக
சந்தித்த போது தங்களுக்குள் ஏதோ உணர்வு, ஈர்ப்பு ஒன்று
இருப்பதை தமது கண்களால் பேசிக் கொண்டார்கள்.

அன்றிலிருந்து குமரனும் வசிகரியும் தினமும் பேசி, பழகி
மனப்பொருத்தம் ஏற்பட்டு இருவரும் காதல் பறவைகளாக
சந்தோசத்தில் பறந்தார்கள்.

ஆனாலும் குமரன் வேறொரு முன்றாவது நாடாக இருந்தான்.
இந்த விடயத்தால் தமது காதலுக்கு பெற்றூர் பச்சைக் கொடி
காட்டுவார்களா என்ற ஏக்கத்தில் இருந்த போது.., ஒரு நாள்
வசிகரி, தன் அப்பாவுக்கு, குமரனை அறிமுகம் செய்து
வைத்தாள்.

இதன் பின்னர் தனது காதல் விடயத்தை மெது மெதுவாக
தனது தந்தையிடம் சொல்ல, அவர் எந்த வித மறுப்புமின்றி
பச்சைக்கொடி காட்டி விட, அந்த நடுச்சாமத்திலேயே கோல்
பண்ணி குமரனுக்குஸ் சொல்லி சந்தோசப் பட்டாள் வசிகரி.

இவ்வாறு இரு வருடங்களாக அவர்கள் காதல் தொடர்ந்தது.
அனால் வசிகரியின் பெற்றோர் கல்யாணம் பண்ணு, கல்யாணம்
பண்ணு என்று ஒற்றைக் காலில் இருந்தார்கள்.

ஆனாலும் வசிகரி தனது வாழ்க்கையில் ஒரு பிஷ்னஸ் லேடியாக
வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் இருந்தாள். இதனால் இரண்டு
வருடம் கழித்தே திருமணம் செய்ய வேண்டும் என்றும்
அதற்கிடையில், ஏதாவது படித்து பட்டம் பெற்று விட வேண்டும்
என்பதில் குறியாக இருந்தாள்.

பெற்றோருக்கு தமது நிலைமை போன்று, பிள்ளைகளுக்கும்
வந்து விடக் கூடாது என்று கல்யாணம் பண்ணியே தீர வேண்டும்
என்று கூறி, வசிகறியுடன் சண்டையே பிடித்து விட்டார்கள்.

" நீ என்னத்தை புதிதாக படிக்கப் போறாய்?
படிச்சு என்னத்தை கிழிக்கப் போறாய்?
படித்தவரை என்னத்தை சாதித்து விட்டாய்?
மேலும் பட்டதாரியாகி என்ன செய்யப் போகிறாய்?
படிச்சவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும்
அதே சமையல் அறை தான்...!
இதில் வேறு வித்தியாசம் இருக்கா சொல்? "
என்று வசிகரியை துளைத்து எடுத்து விட்டார்கள்...!

ஆனாலும் வசிகரிக்கு தொடர்ந்து படிக்கவே விருப்பமாக
இருந்ததால், என்ன செய்வது என்று குமரனிடம் கேட்க
" உன் விருப்பப் படியே செய் " என்று சொல்லி விட்டான்.
இதனால் திரிசங்கு நிலையில் இருந்த வசிகரி தீவிரமாக
யோசித்தாள்..

எல்லோரையும் சமாதானப் படுத்தும் வகையில் பெற்றோரின்
விருப்பப் படி நடந்து கொள்வது என்று தீர்மானம் எடுத்தாள்.

இது வசிகரிக்கு ஒரு சின்ன மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி
இருந்தாலும் கூட அந்த திருமணத்தால் சந்தோசமடையும்
மற்றவர்களுக்காக, குறிப்பாக தன் பெற்றோருக்காக
அனைத்தையும் தாங்கிக் கொண்டாள்.

இனிதான ஒரு நன்னாளில் திருமணம் தடல் புடலாக
நடந்தேறியது. அனைத்து சந்தோசங்களுடன்
குமரன் வசிகரி தம்பதிகள் நன்றாக வாழ்ந்தனர்.

திருமணம் முடித்து மூன்று மாதங்களின் பின்னர்
தான் விரும்பிய படிப்பை படித்து பட்டம் பெற்ற வசிகரி,
தனது எண்ணம் போல் இன்று ஓர் உணவு ஏற்றுமதிக்
கொம்பனியின் முதலாளியாக, இந்த போட்டியான
உலகினில் ஒரு பிஷ்னஸ் லேடியாக வந்து விட்டாள்
வசிகரி. ...!

Print this post

2 comments:

Unknown said...

வசிகரி உண்மையில் திறமை உள்ளவர் தான்.
ஏனெனில் பெற்றோரின் விருப்பத்தையும்
நிறைவேற்றி, தனது விருப்பத்தையும் பல
கஸ்ரத்தின் மத்தியில் செய்து காட்டியிருக்கிறார்.
இதில் கணவருடைய ஒத்துழைப்பும்
சரியாக கிடைத்தது, வசிகரிக்கு இன்னும்
சாதகமாக அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள்.
கனடாவிலிருந்து றொபின்சன்.

Unknown said...

அன்புடன் றொபின்சன் அவர்கட்கு,
தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும்
நன்றிகள்.
இது உண்மை கதையை தழுவியது.
வசிகரி ரொம்பவே கெட்டிக்காரி.
நிறையவே திறமைகள் உள்ளது.
திறமையான முறையில் பயன் படுத்தி
வெற்றியும் பெற்றுவிட்டாள்.
இதனை விட எத்தனையோ பெண்கள், திருமணத்தின்
பின் தமது இலட்சியங்களை கிடப்பில் போட்டு விட்டு
குடும்பம், பிள்ளை என்று வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் வசிகரி ஒரு எடுத்துக்காட்டு...!