உள்ளங்கை வரை, சுருங்கிய உலகினில்,
தொடை வரை சுருங்கிய, ஆடை அணிந்து,
படை எடுக்கும் பெண்களை - நீ
தடை விதிக்கச் சொல்லவா - இந்த,
அலை ஆடை அணிந்துள்ளாய்...?
அரை குறை, ஆடை அணிந்து,
அரை வரை, தெரியும் வகையில்,
தரையிலே, நடந்து வந்து,
சிதைக்கிறீர், எம் இளையவர் நெஞ்சை,
விதைக்கிறீர், அவர் நெஞ்சில் நஞ்சை..!
நாகரீக வளர்ச்சியில், இது அற்ப ஆசையாய்,
மேகமாய் சூழ்ந்துள்ள, ஒரு கொடிய நோய்,
வேகம் கொண்டு, பெற்றோர் திருத்தாவிட்டால்,
மோசமாகிவிடும், நாட்டில் குற்றங்களெல்லாம்,
நாசமாகிவிடும், இளையவரின் வருங்காலமெலாம்..!
ஒருவன், ஒன்றைச் செய்தால் - அதை
நீயும், செய்து காட்டு.
அதை விடுத்து, தடுக்க முயலாதே...
இது தான், கருத்துச் சுதந்திரமாம்...!
பிழையாக விளங்கிய சிலர் - இதை
சுளையாக பயன்படுத்தி, கெடுக்கின்றார்..
வளையாத, நற்குணம் கொண்டோரும்,
சளையாது இறங்குகின்றார், களத்தில்...!
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது ..."
என்பது போல்
பெண்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால்,
நாட்டில் குற்றங்களை தடுக்க முடியாது...!!!
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment