சங்கடங்கள், ஏனடி பெண்ணே..?
அந்தரங்கம், ஏதுமில்லை நமக்குள்,
அந்தரமின்றி, ஆறுதலாக வாடி - நீ
தந்த முத்தங்கள், இனிக்கிறது இப்போதும்...!
தாலி கட்டி உனை சொந்தமாக்கிட்டேன்,
வேலி போட்டு வைக்காதே - ஆசைகளுக்கு,
போலி ஆக்கிடாதே - என் இதயக் கனவுகளை,
கோலிக் கொடு, இரு பிள்ளைக் கனிகளை...!
சாவி வைத்து, அடக்கிப் பூட்டி,
பாவியாய், என்னை தவிக்க வைக்கிறாய்.
வாலி போல எனக்கு, தெரியாது கவியெழுத,
காலி தான் ஆக்கலாம், பல பியர் டின்களை..!
காதல் மகா ராணியாக்கி - என்
சாதல் வரை காத்திருப்பேன்.
மோதல் ஏதுமின்றி சேர்ந்திரு - என்
வாழல் காலம் வரையும்....!
கொடுத்திட்டேன், என்னுயிரை உன்னிடம்,
தடுத்திட்டேன், என் ஆணவம் திமிரெல்லாம்.
வெறுத்திட்டேன், எனக்கென்றிருந்த ஆசைகளை,
எடுத்திட்டேன் முடிவு, உனக்காக வாழ்வதென்று...!
தட்சணையாக, கொடுக்கிறேன் என்னை,
வஞ்சனையின்றி, கொடுத்திடு உன்னை,
பஞ்சணை மீது, கட்டி, எனை அணைத்து,
முத்தங்கள் கொடு, நான் முழுமையாக வாழ....!!!
Sunday, July 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//தட்சணையாக, கொடுக்கிறேன் என்னை,
வஞ்சனையின்றி, கொடுத்திடு உன்னை,
பஞ்சணை மீது, கட்டி, எனை அணைத்து,
முத்தங்கள் கொடு, நான் முழுமையாக வாழ....!!! //
அன்பின் ஆழத்தை உணர்த்தும் மிக அழகான வரிகள்.... மிக ரசித்தேன்...:))))
அன்புடன் திரு.நவீன்!
நன்றி உங்கள் கருத்துக்கு...!
அது சரி, நீங்கள் கெட்டி மேளம் கொட்டி, கட்டியணைத்து முத்தங்கள் வாங்கிட்டீங்களா....?
Post a Comment