தங்கிவிடும் நெஞ்சினிலே,
நெஞ்சினிலே தங்கி விட்டால்,
விஞ்சி விடும் விரக்திகள்...!
விரக்திகள் மிஞ்சி விட்டால்,
வெறுப்புக்கள் வந்து விடும்.
பொறுப்புகள், குறைந்து,
மறுப்புகள் கூடி விடும்....!
தேவையற்ற விடயங்களுக்கு,
கோபத்தை காட்டி விட்டால்,
தேவையான விடயங்களில் - அது
பயனற்றுப் போய் விடும்....!
உனது விடயங்களில் தலையிட்டால்,
அதில் நீ கோபப் பட்டால்,
சரியிலும் சரி.. தேவயும் கூட...,
தேவையற்ற விடயங்களில், விட்டு விடு..!
பாசம் காட்டி, பரவசமாய் வாழ்,
நாசம் செய்து, துவம்சமாய் ஆக்கிடாதே,
பாசத்தை நீ ,துவம்சம் செய்து விட்டால்,
வேசமாய் போய்விடும், வாழ்க்கையின் முழுவதும்....!
தேவையோ இந்த, வீணான பழியெல்லாம்..?
பாதை தெளிவாக, சுத்தமாக உள்ளது,
கரடு முரடையே, தேர்ந்தெடுக்கின்றாய்....,
விளைவு நிச்சயம், விபரீதமாகத்தான் இருக்கும்...!
பதற்றப் படாதே, பரவசப் படாதே..,
ஓரிடத்தில் நின்று, நிதானமாக யோசி,
எது சரி , எது பிழை என்பதை ...,
பாதி வெற்றி, அடைந்து விடுவாய் நிச்சயமாக....!
அனல் பறக்கும் - உன் கோபக்
கனல்களை, தாங்க முடியவில்லை..,
புனல் கொண்டு அழித்திடு - அது
தணல் ஆகுமுன் , உன் மனத்தில் இருந்து...!
கொட்டிவிடு, உனது துன்பங்களை வெளியில்,
கட்டிவிடு பந்தயம், மறக்க உன் கோபங்களை,
வெட்டிவிடு, துன்பங்களின் வருகையின் தொடக்கத்திலேயே.
மண்டியிடு மனத்திடம், என்றும் உன் மனச் சாந்திக்காக...!!!
2 comments:
உண்மையில் இப்போது எல்லோருக்கும் கோபப்படுவது வழமையாகி விட்டது. எல்லோரும் கோபத்தை தணித்துக்கொண்டால் அநேகமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.
முதலில் நீங்கள் குரைத்து விட்டீர்களா..? ஹா ஹா ஹா..!
Post a Comment