Wednesday, July 2, 2008

உன்னைச் சரணடைந்தேன்...!!

புலர்ந்த காலைப் பொழுதினிலே,
உலர்ந்த வண்ண ஆடை அணிந்து,
மலர்ந்த செந்தாமரை போல்,
எழுந்து வந்த என் மங்கையே...!

பரந்த உன் வட்ட, முகத்தினிலே,
அரைத்த கஸ்தூரி மஞ்சள் பூசி,
சிறுத்த உன் நெற்றி நடுவில்,
கறுத்த நிறப்பொட்டு, வைத்தவளே...!

கண்ணிமைக்கு மையிட்டு,
உதட்டுக்கு சாயம் பூசி,
அதட்டும் உன்னிரு கண்களாலே,
மிரட்டி விடும் அழகரசியே...!

வாரி இழுத்து, பின்னலிட்டு,
கொத்தாக மல்லிகைப் பூச்சூடி,
தங்கக் கலரில், பட்டுச்சேலை கட்டி,
காட்சியளிக்கும் லட்சுமி தேவியே...!

பொன் நகை தவிர்த்து,
புன்னகை புரிந்து,
அன்பினால் ஆட்கொண்டிடும்,
புன்னகை அரசியே...!

வீட்டுக்கு வந்தோரை,
விருந்தோம்பி உபசரித்து,
வருந்தாமல் வழியனுப்பும்
அருந்ததி, வடிவுக்கரசியே.....!

சுட்டுவிரல் காட்டி, உன்னிடம்
மட்டுமே சொல்கின்றேன்..
சரணடைந்தேன் நான் - எனது
மரணம் வரை உன்னிடம்...!!!

Print this post

2 comments:

Anonymous said...

"சுட்டுவிரல் காட்டி, உன்னிடம்
மட்டுமே சொல்கின்றேன்..
சரணடைந்தேன் நான் - எனது
மரணம் வரை உன்னிடம்...!!!"

எனும் உங்களது கடைசி நான்கு வரிகள் மனதை தொட்டு, உறுதியான முடிவொன்றை சொல்கின்றது.
அவ்ளோ பாசமா.. கொடுத்து வைத்தவள் அவள்..

அப்துல்லா.

Unknown said...

நன்றி நண்பரே!
நீங்க சொன்ன மாதிரி ரொம்பவே.....
அவள் தான் என் உயிர் மூச்சு..!