Sunday, September 21, 2008

எளிமையான வாழ்க்கை வாழ்வோம்....!!!


நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்கள் வாழ வேண்டும்
என்று நினைப்பது உத்தமமான எண்ணம். அதேநேரம் ஆசையை
வளர்த்துக்கொண்டு போனால் ஆத்ம அபிவிருத்தி என்பதே இல்லாமல்
போய் விடும்.
சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி.
எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ அவ்வளவு
எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
விடயம்.
வயிற்றுக்கு உணவு ,மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளிய வீடு
இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும் பெறவேண்டும்.
இதற்கு மேல் ஆசை மேல் ஆசை தேவைக்கு மேல் தேவை என்று பறக்க
வேண்டியதில்லை.
நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்கு செய்யும்
மிகப்பெரிய பரோபகாரம்.
கிணற்றில்நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதி்ல்லை.
ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை
நம்மால் உணர முடிகின்றது.
எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரிய மரங்களை தண்ணீரில்
போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல்
நம்மை துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம் எனம் தண்ணீரில் ஆழந்து
விட வேண்டும்.
அப்போது துன்ப விடயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத்
தொடுவதே இல்லை.
நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரம லேசாகிவிடும்.

Print this post

No comments: