Tuesday, September 2, 2008

எதிரியை விட துரோகியே ஆபத்தானவன்....!!!

சகுனி வேலைகளில் தேர்ச்சி பெற்றவர்
சந்தர்ப்பத்ததிற்கேற்ப கதைகள் புனைந்து
குசினி வேலைகளில் தம் திறமை காட்டி
கூட இருந்தே குழி பறிப்பர்....!

நண்பர்கள் மத்தியில சச்சரவுண்டாக்கி
பண்பர்கள் போலே நடந்து கொள்வர்
வீண்பழி சுமத்தி கீழே வீழ்த்துவர்
துரோகிகள் சேர்ந்து தாழ்ந்து தூற்றுவர்..!

முன்னுக்கு நல்ல பிள்ளையாட்டம்
பின்னுக்கு கள்ள சீட்டாட்டம்..!

வழிய வழிய சிரித்துப் பேசி
அழிய வைப்பர் எமையெல்லாம்
கழிய இவர் துன்பமெல்லாம்
தனிய செல்ல வேண்டும் நாம்....!

தன்வேலை முடியும் வரை அண்ணன் என்பர்
பின் வேலை முடிந்ததும் மடையன் என்பர்
கிறுக்கன் இவனையெல்லாம்
முருக்கங்காய் போலே சப்பித்துப்ப வேணும்...!

குறுக்கு வழியிலே காரியம் பார்தது
நறுக்குவர் நல்லவர் நரம்பையெல்லாம்
வெறுத்து ஒதுக்குவர் பெரியோரெல்லாம்
சிறுத்து சிதறும் பாதித்தவர் உள்ளம்...!

மனச்சாட்சி என்பது உளச்சாட்சி
மற்றவன் சொல்வது பஞசாயத்து
உனது சாட்சிக்கு நீ கட்டுப்பட்டால்
திருந்தலாம் உலகில் நல்லவனாய்....!

பொறாமை கொண்டு மற்றவனை வீழ்த்தி
அடையும் லாபம் ஒன்றுமில்லை.
போட்டி போட்டு நீயும் செய்
பொறாமைப்பட்டு குழி பறிக்காதே...!

ஒன்று சொல்கிறேன் கவனமாக கேள்
நன்று செய்தால் நலமுடன் வாழ்வாய்
வென்று வருவாய் உலகை எல்லாம்
இல்லையேல்
நரகத்தை உண்ணும் பன்றி போலே
பரலோகத்தில் வாழ்வதை விட
மரித்துப்போ மற்றவர் நலம் வாழ....!!!

Print this post

2 comments:

Anonymous said...

அன்புக்குரியவருக்கு
தங்களது கவிதை நிதர்சனமானது. இப்போ உலகினிலே போட்டியை விட பொறாமையே கூடி விட்டது. இல்லையெனில் தமிழனுக்கு ஏன் இந்த அவலம்?
ஒருவனை மொட்டையாக்குவதற்கு பயன்படுத்தும் மூளையின் ஒரு பகுதியை ஆக்ககரமான வேலைகளுக்கு பயன்படுத்தினால் தமிழன் எங்கோ போய் விடுவான்.
நீண்ட பெருமூச்செறிந்து காத்திருக்க வேண்டியிருக்குது எமது சுதந்திரம் வேண்டி...
தங்களது கவிதை இதை படிப்பவர்களுக்கு புத்தியை
கொடுக்கட்டும். . .
Ragaventhan.

Unknown said...

அன்புடன் திரு ராகவேந்தன் அவர்கட்கு
வணக்கம்.
தங்களது கருத்துக்கள் பார்த்தேன். சந்தோசம். தாங்கள் கூறிய
"தமிழனுக்கு ஏன் இந்த அவலம்?
ஒருவனை மொட்டையாக்குவதற்கு பயன்படுத்தும் மூளையின் ஒரு பகுதியை ஆக்ககரமான வேலைகளுக்கு பயன்படுத்தினால் தமிழன் எங்கோ போய் விடுவான்."
எனும் கருத்து அருமையிலும் அருமை. எல்லோரும் யோசிப்பார்கள் என்று நம்புவோம்.
நீங்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கேற்ப தங்களது மின்னஞ்சல் முகவரி குறிப்பிடாதது கவலையளிக்கிறது.
முடிந்தால் அனுப்பி வையுங்கள்.
உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.