Sunday, April 11, 2010

ஏன் எம்மைக் காக்கவில்லை?




நல்லூரில் வீற்றிருக்கும் கந்தனே முருகா

உள்ளுரில் சுற்றியிருக்கும் சண்டைகளைய வாவா

தமிழூரில் பற்றியிருக்கும் தமிழடக்கு முறைகளை

அள்ளுரில் கோட்டு நசுக்கிவிட வாவா


எறிகணை கொண்டு பறிக்கிறார் எம்முயிரை

பறிகளும் இன்றிநாம் பரந்து திரிகின்றோம்.

சொறிகளும் விடவில்லை துரத்துது எம்மை.

கரிக்குது நாக்கு கடிக்க ஏதுமின்றி.


முல்லையில் எம்மினம் முடங்கிப் போச்சுது.

வல்வையில் பிறந்தவனும் வதங்கிப் போயினான்.

ஒளவையின் வழிவந்தோர் அடங்கிப் போச்சுது

அவ்வையும் கேள்விகள் கேட்காமல் போச்சுது.


லட்சங்களாக் செத்துப் போனார்கள்.

பட்சங்களின்றி கொத்துக் கொத்தாக

தட்சனை கூடக் கொடுக்கவில்லையே

கர்ஜனை செய்த கொடும்பாவிகளுக்கு?


பார்த்துவிட்டா இருக்கிறாய் உம் பக்தர்களெம்மை

தூர்த்துவிட்டுப் போகிறார் எம் உடல்களுக்கு மண்ணை

முன்விழுந்த செல்களுக்கும் முருகா என்றழைத்தோம்

கண்திறக்க வில்லையே எம் அழைப்புகளுக்கெல்லாம்


எமக்கென்ன கவலை முருகனிருக்கும் வேளையில்

என்றிருந்த எம்மை கருக்கிவிட்டாய் சாலை(ள)யில்

ஏன்முருகா எம்மை கைவிட்டு விட்டாய்?

என்னகுறை எங்களிடம் கண்டுதான் விட்டாய்?


ஏன் வந்து எம்மைநீ காக்கவேயில்லை?

ஏனிந்த அவலம் என்று கேட்கவேயில்லை?

பாரினிலே தமிழனுக்கு நாதியே இல்லை

நீயும் விட்டால் உலகினிலே வாதியே இல்லை.


பிஞ்சின் குரல் கேட்டும் நீ இரங்கவேயில்லை

நஞ்சின் பரல் போட்டு எம்மை சாகடித்தபோதும்.

வஞ்சம் செய்து பாரதம் வழிதவறியபோதும்

மஞ்சத்தில் நீயிருந்தாய் உன்னிரு மனைவியரோடும்


பஞ்சத்தில அடிபட்டு பசித்திருந்த போதும்

நெஞ்சத்தில் உனைவைத்து வணங்கினோம் நாமும்

தஞ்சத்தில் கோவிலை நாம் அடைந்திருந்த போதும்

கஞ்சனவன் விடவில்லை கடைசியிருந்த வரையும்.


பிழை செய்தான் கொடு அவர்க்கு தண்டனை

களைசெய் அவர்களை களத்திலே நினறு

மழலைகளை கதற களைந்தது சரியோ சொல்?

விடலைகளை குதறி அழித்தது சரியோ சொல்?


முருகனிருக்கிறான் என்ற மூர்க்கத்திலிருந்தோம் - நீ

அருகிலேயே இல்லை என்று அவலப்படுகிறோம்

கருவிலேயே கூடஎம்மை அழித்துக் கொல்கிறார்.

வெகுவிலே வா எம்மை வீரத்துடன் காத்திட.


தட்டிக்கேட்டிடு எம் கொடுமைகளை எல்லாம்

வெட்டிக்கோடிடு எம் தனிமையான தேசத்தை

கட்டிக்காத்திடு எம் தமிழன் ஈழத்தை

முட்டிபோட்டு பொழிகின்றோம் உன்மீது பாசத்தை.

Print this post

No comments: