வசந்த காலங்கள் இழந்து - இரு
தசாப்த காலங்களாக
பறக்கத் துடிக்கும் - தமிழ்
இதயத் துடிப்புக்கள் ஏராளம்....!
வதைக்கும் சிங்கள அரசு,
சிதைக்கும் தமிழர் ஓர்மத்தை.
சதைக்கு அலையும் துரோகிகள்,
விதைக்கும் நஞ்சை, இள நெஞ்சுகளில்...1
வேரோடு பிடுங்கியெறி, உன் கௌரவத்தை,
ஊரோடு பதுங்கியெழு, பட்டாளமாக,
காரோடு வந்த கயவன், காற்றோடு போவான்.
பாரோடு பேசு, உன் விடுதலையின் வீரத்தை.....!
நார் நாராக, தும்பு பறந்தது போதும்.
சேர் ஒன்றாக, தும்பெல்லாம் சேர்ந்து கயிறாக,
பார்.. விடுதலைக்காக, சுதந்திர இலக்கை,
பேர் சொல்லும் தமிழன் வீரத்தின் வெற்றியை...!
மறப்போம், எம்முள் பழையவற்றை,
பறப்போம், உலகினில் சுதந்திரமாக,
வெறுப்போம், பொறாமையால் புழுங்குவதை,
அறுப்போம், எதிரியின் கருந் திட்டங்களை..!
அன்னதானம் செய்வோம், ஏழை பசி அடங்க..
கண்தானம் செய்வோம், குருடன் பார்வை கிடைக்க..
ரத்ததானம் செய்வோம், தவிக்கும் உயிர் காக்க..
சமாதனம் செய்வோம், தமிழன் சுதந்திரம் அனுபவிக்க...!
புலரட்டும் புதிய பொழுது,
வளரட்டும் மக்களிடை ஒற்றுமை,
ஒளிரட்டும் சுதந்திர ஒளிக் கீற்று,
மலரட்டும் உலகினில் சமாதானம்...!!!
Tuesday, July 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
very good...
உண்மையிலும் உண்மை...
ஏக்கப் பெருமூச்சுக்கள் அனைத்தும், மீள எழும்ப முடியாத வாறு ஒரே மூச்சாகவே அடங்கி விடுகின்றன.
இதற்கெல்லாம் விடிவு தான் எப்போ?
எல்லாம் அவன் கையில்...
சரி அன்பரே.. உங்கள் பெயரை குறிப்பிட மறந்து விட்டீர்களே....?
Post a Comment