புன்னகையொளி வீசுமுந்தன் வதனத்தில்
பொங்கியெழும் கோபம் ஏன்?
பொன்னகை மட்டும் ஜொலித்தால்
மதிப்பரோ யாரும் இவ்வுலகில்...?
கோபம் என்பது தற்காலிக பைத்தியம்
சொன்னவன் ஓர் ஆஸ்தான கவிஞன்.
புரிந்து கொண்டேன், அவன் சொன்னதில்
பொய் ஏதும் இல்லை என்பதை...!
தூக்கம் போல் நடித்து - என்னை
தூசாக நினைத்து வெறுத்தது,
தூக்கி வாரிப் போடுகின்றது - இரவெல்லாம்
தூக்கம் ஏதுமின்றி எனக்கு...!
தவிர்த்துவிடு இனிமேல் இந்த
உதிரியான கோபம், பிடிவாதங்களை,
மலர்ந்துவிடு, சூரியனைக்கண்ட தாமரை போல்
இதழெல்லாம் விரித்து, செக்கச்செவேலென...!
தவிர்க்காதே என்னை, தயவு செய்து..,
உதிர்ந்து விடுவேன் நான், வாடிய பூவாய்..
அது தான் உனது விருப்பமெனில்
உதிர்ந்து விடுகிறேன், விரைவில் வாடாமலேயே...!!!
Tuesday, June 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment