மனதுக்கு ஆறுதல் வேண்டி, ஆத்தோரம் ஒன்றிலே அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டு, ஆற்றில் ஓடும் நீர் எவ்வளவோ ஆனந்தங்களில் சலசல கலகல என ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டும், நெருக்கி அடித்துக் கொண்டும் ஓடிக்கொண்டிருந்ததை, ரசித்துக்கொண்டிருந்தேன்.
ஆற்றில் ஓடும் சத்தத்தையூம் மீறி கலகல வென்ற சிரிப்புச்சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை......
கனவா அல்லது நிஜமா என ஒருமுறை எனது உடம்பில் கிள்ளிப்பார்த்தேன்.
ஆம் அது நிஜமே தான்.....
ஒரு குட்டித்தேவதை போன்ற அழகான பெண்ணொருத்தி வானத்து நிலாவை பார்த்து கைகொட்டி தன்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
நானும் என்னத்தை பார்த்து சிரிக்கிறாள என்பதை அறிய ஆவலாகி,
அவளருகில் சென்ற போது தான் புரிந்தது, அவள் பதிவூ செய்யப்பட்ட நகைச்சுவைத்துணுக்குகளை கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளது சிரிப்பு, அழகு, சுட்டித்தனம், எல்லாமே ...
என்னை அவளது இடத்தை விட்டு நகர மறுத்தது.
அவளுடன் பேசலாமா என யோசித்து விட்டு பேசிப்பார்ப்போம்
என தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசினேன்.
தங்கச்சி...........
ம்.......
எனக்கூறியவாறு அண்ணார்ந்து பார்த்து திரும்பினாள்.
அவள் திரும்பிய திருப்பத்தில் கண்கள் உருண்டு மருண்டன.காதில் இருந்த தொங்கட்டான் கிலுகிலு என ஆடியது.இவை அனைத்தும் அவளது சுட்டித்தனத்தை காட்டியது.என்னைக் கண்டதும் எழுந்து நின்று நகைச்சுவையை நிறுத்தி விட்டுஎன்னை ஒருகணம் ஆழ்ந்து பார்த்து விட்டு
"என்னண்ணா............."எனக்கேட்டாள்.
நானும் என்ன கதைப்பதெனத் தெரியவில்லை...
"என்ன இந்தப்பக்கம்..?"எனக்கேட்டேன்.
"சும்மா தான் மனசு சரியில்லை காத்து வாங்கலாம் என்று......"
"உன்னை பார்த்தால் சின்னப்பொண்ணு மாதிரி இருக்கிறாய்...
பெரிய கதை எல்லாம் பேசுறாய்....
சரி அப்படி உனக்கு என்னதான் மனசு சரியில்லை?"
"நான் வயசிலயூம் பார்வையிலயூம் தான் சின்னப்பொண்ணு....
ஆனா எனக்கு கல்யாணம் நடந்து ஒருமாதம் கூட சந்தோசமாக வாழேல்லை...."
"ஏன்டா குட்டி"
"அம்மா அப்பா பார்த்து கட்டி வைத்த மாப்பிள்ளை தான்"
"அப்புறம் என்ன....?"
"அவனுக்கு சீதனம் வேணுமாம்..........."
"ஏன் அவனுக்கு உழைக்கேலாதாமா..........?"
"அவன் சரியான சுயநலவாதி........... சந்தேகப்பிராணி.........எனது வெளி அழகைப்பார்த்து மயங்கிய அவன்,
மன அழகை பார்க்கத் தவறி விட்டான்.நான் வெளியில் செல்லும் போது,
பலர் லொள்ளு விடுவதும், சைட் அடிப்பதும் எனக்குத் தெரியூம்.......நான் அதை கண்டுக்கிறதே இல்லை........இதை அவன் பாத்துட்டு சந்தேகப்படுகிறான்......அழகாக உடுத்த முடியல......யாருடனம் சந்தோசமாக கதைக்க முடியல.....
நரக வாழ்க்கை வாழ்ந்து ஒரு மாதத்திலேயே முடிஞ்சு போச்சு...... "
என்று சொன்ன அந்த பிஞ்சின் கண்கள் குழமாகி விட்டன......
வெட்கத்தில் அவள்
"நான் வரேண்ணா........சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம்...."என்று சொல்லியவாறே மின்னலென ஓடிவிட்டாள்....காத்து வாங்கப்போன நான் கவலையூடன் திரும்பி வந்தேன்.பெண்மைக்கு விலை பேசும் வீம்பர்களின் செயல்
எப்போது மாறும் என்று......
Print this post
No comments:
Post a Comment