மனதுக்கு ஆறுதல் வேண்டி, ஆத்தோரம் ஒன்றிலே அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டு, ஆற்றில் ஓடும் நீர் எவ்வளவோ ஆனந்தங்களில் சலசல கலகல என ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டும், நெருக்கி அடித்துக் கொண்டும் ஓடிக்கொண்டிருந்ததை, ரசித்துக்கொண்டிருந்தேன்.
ஆற்றில் ஓடும் சத்தத்தையூம் மீறி கலகல வென்ற சிரிப்புச்சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை......
கனவா அல்லது நிஜமா என ஒருமுறை எனது உடம்பில் கிள்ளிப்பார்த்தேன்.
ஆம் அது நிஜமே தான்.....
ஒரு குட்டித்தேவதை போன்ற அழகான பெண்ணொருத்தி வானத்து நிலாவை பார்த்து கைகொட்டி தன்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
நானும் என்னத்தை பார்த்து சிரிக்கிறாள என்பதை அறிய ஆவலாகி,
அவளருகில் சென்ற போது தான் புரிந்தது, அவள் பதிவூ செய்யப்பட்ட நகைச்சுவைத்துணுக்குகளை கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளது சிரிப்பு, அழகு, சுட்டித்தனம், எல்லாமே ...
என்னை அவளது இடத்தை விட்டு நகர மறுத்தது.
அவளுடன் பேசலாமா என யோசித்து விட்டு பேசிப்பார்ப்போம்
என தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசினேன்.
தங்கச்சி...........
ம்.......
எனக்கூறியவாறு அண்ணார்ந்து பார்த்து திரும்பினாள்.