Tuesday, April 15, 2008

பச்சையாக சொல்கிறேன் நான்...,அவளை ரொம்ப பிடிச்சுப்போச்சுது எனக்கு.....!


கோலாலம்பூர் கோட்டுமலையான் கோயிலிலே..,
தீபத்திருநாள் கொண்டாட்ட கூடலிலே..,
முண்டியடித்து பக்தர்கள் குதூகலிக்கையிலே.....,
குண்டுமணி போல வந்து நிண்டு கொண்டிருந்தாள்,
ஓர் இளமங்கை...!

மல்லிகை பூச்சூடி ......
மறூண் கலர் தாவணி அணிந்து...,
பந்தா ஏதுமின்றி, தந்தையாருடன்...
வந்தாள் கோவிலுக்கு அர்ச்சனைத்தட்டோடு...!

அவளை கண்டதும், உதித்து மலர்ந்தது,
என் மனதினுள், புது சூரியன் ஒன்று..
மெய் மறந்து போனேன் நான் - இது
மெய் தானா எனக்கேட்டு...!

அனைத்து கண்களும், அவள் மீது பட,
அத்தனை கண்களையும், ஏமாற்றி விட்டு...,
எனையளைத்து.... வாழ்த்து சொன்னதும்..,
ஏங்கிப்போனேன் நான்......
துடித்தது இதயம் படபடவென...
வெடுக்கென சொன்னேன் என் தீபாவளி வாழ்த்து...!

அவள் பார்வையிலும் பேச்சிலும்
மயங்கி கிறங்கிப்போனேன் நான்....!

சாப்பிட நானழைத்து, உட்கார்ந்து கொண்டதும்...,
இட்லி, தோசை என ஓடர் குடுத்தாள்...
விரும்பிச்சாப்பிட்டேன் வேண்டாத தோசையையும்,
கரும்பிலும் இனித்தது, புளித்த தோசையும்....!

சாப்பிட்டு முடித்து காசு கொடுக்கவும்.....,
கை பிடித்து, தடுத்து, அவள் நீட்டவும்....,
நான் ஒரு பார்வை பார்க்க.. அவள் அமர்ந்து கொண்டதும்...,
மறக்க முடியவில்லை எனக்கு...!

அனுமதி கேட்டு, அவள் படம் பிடித்து,
அடிக்கடி அவளை, பார்த்து நினைத்ததும்....,
தந்திரமாக, தொந்தரவின்றி சம்மதம் கேட்க....,
சந்தோசத்தில் மிதக்க வைத்தாள்......
தன் சம்மதம் சொல்லி...!

வெட்கத்தை விட்டு...,
பச்சையாக சொல்கிறேன்.. நான்...,
சத்தியமாக அவளை ரொம்ப....,
பிடிச்சுப்போச்சுது எனக்கு.....!

Print this post

No comments: