Saturday, April 12, 2008

நாகரீக மோகம்......


11 மணியாகியும் மாக்கற்றுக்கு போன மனிசன
இவ்வளவு நேரமாக காணோம்.....
என அலுத்துக்கொண்ட பரிமளம் வாசலை எட்டிப்பார்த்தாள்.
பாதையில் மாலினி ரீச்சர் நடந்து போவதை கண்டவள்...,

"ரீச்சர்.... ரீச்சர்... இஞ்சை ஒருக்கா பாருங்கோ.....
நான் இஞ்சினியர் தர்சினியின்ர அம்மா... ரீச்சர்...."
தன்னை யாரோ கூப்பிடுவது போல இருக்கவே
திரும்பிப்பார்த்த ரீச்சர்..,
பரிமளத்தை கண்டு - கிட்ட வந்து -
"ஓ... நீங்களா? எப்படி இருக்குறீங்க....தர்சினி எப்படி இருக்குறாள்...?
" நாங்கள் நல்லா தான் இருக்கிறம். தர்சினிக்கும் என்ன குறை......
வாங்க ரீச்சர் - ரீ குடிச்சிட்டு போகலாம்..."
என்ற பரிமளம் வீட்டுக்குள் கூட்டிச்சென்று உட்கார வைத்தாள்.

"ரீச்சர்.. கூலா...? ஹொட்டா.... குடிக்குறீங்க..."
"வெய்யில் கண்ண எரிக்குது..
கூலா இருந்தா குடுங்க.. நல்லா இருக்கும்..."

ரீச்சருக்கு வண் மினிற் சொன்ன பரிமளம்
வேலைக்காரிக்கு ஓடர் போட்டாள்...
"கலா.... தர்சினியின்ர ரீச்சர் வந்திருக்கிறா...
நல்ல கூலா fresh apple juice எடுத்திட்டு வா..
அத்தோட ப்றிஜ்ஜில கேக்கும் இருக்கு - எடுத்திட்டு வா..."

"சொறி ரீச்சர்.. தர்சினியின்ர அல்பம் பார்க்குறீங்களோ..?"
"ஓமோம் குடுங்க.. அவளையும் பார்த்து கன காலம் ஆச்சுது..."

பரிமளத்திடம் அல்பத்தை வாங்கி பார்த்த ரீச்சர்...
"ஓ முதல் மாதிரி நல்ல ஸ்லிம்மாகவே இருக்கிறாள்...
இது ஆர் பெடியன்..."
என்று தர்சினியுடன் நெருக்கமாக இருந்தவனை காட்டி கேட்டா

"ஓ இதுவா...
இவர் தர்சினியோட வேலை செய்யிறவராம்...
தமிழன் தான்..
ஆனால் தமிழ் பேச வராது...
தமிங்கிலிஷ் தான்....
எங்கயாவது ஒரு சொல்லு போட்டு
காலங்களை மாத்தி மாத்தி
ஏதோ ஒரு மாதிரி தான் சொல்லுவார்.

முதல்ல எங்களுக்கு விளங்கவே கஷ்ரமாக தான் இருந்தது...
இப்ப எங்களுக்கு ஓரளவு ஓகே தான்..
நாங்கள் இங்கிலீசில கதைக்கலாம் தான்...
ஆனால் நாங்க கதைக்கும் இங்கிலீசு விளங்குமோ என்னவோ...
அதைவிட அவர் தமிழ்ல கதைக்க வேணும் தானே....
அது தான் தமிழ்ல கதைக்கோணும் என்று
நாங்கள் அன்புக்கட்டளை போட்டிருக்கிறம்..."

"அப்ப இந்த பையன் தான் தர்சினிய....."

"ஓமோம் அவர் தான் அவள கட்டப்போறார்....
ஆள் லண்டனிலயே பெரிய பிஸ்னஸ் காரன்....
2 வயதிலிருந்தே லண்டனில தான் இருக்கினம்....
அவர் இவ்வள்வு தமிழ்ல பேசுறதே ஆச்சரியம் தான்.."

"ஓமோம் "
என்று சொன்ன ரீச்சர் தனக்குள்ளே நொந்து கொண்டார்..

எக்ஸ்கியூஸ் மி
என சொல்லிய வாறு நுழைந்த கலா
யூசையும் கேக்கையும் குடுத்து விட்டு சென்றுவிட்டாள்...

இருவரும் படிப்புக்கள்
விலைவாசி
ஊர் - அரசியல் என்று
கதைத்துக்கொண்டே போனார்கள்..

இந்த நேரத்திலே...
"ஆயிரம் மலர்களே மலருங்கள்..... அமுத கீதம் பாடுங்கள்.. "
என்று இசைக்கவே போனை எடுத்து பார்த்த பரிமளம்..,
"ரீச்சர்.. தர்சினி தான் எடுக்கிறாள்.. ஒரு வண் மினிற்றா..."
என்றவள் தர்சினியுடன் பேச தொடங்கினாள்....

"ஹலோ தர்சி எப்படி இருக்கிறாய்..?"
"ya mum... I am fine..."
"உன்ர பிசிக்ஸ் ரீச்சர் வந்திருக்கிறா... கதைக்கிறியா..?"
"ohh maliny teacher......?"
"ஓமோம்... அவ தான் குடுக்கிறன் கதை..."
"ya.."
பரிமளம் போனை ரீச்சரிடம் குடுத்திட்டு
"பேசிக்கொண்டிருங்க வாறன்.."
என்று விட்டு கிச்சின் பக்கம் சென்றாள்...

"ஹலோ.."
"hi teacher.... how are you..."
"ya I am fine... and you..?"
"I am everything ok madam"
"London is beautifull medam...
I have lot of friends...
All are london white people...
they are very nice..
I love London and London people...
they are freedom people....
what they can do..? whatever they want...
if you can medam come and see here...
ok medam...
my friend Robert waiting for me few minutes....
I will stay them, after 3 days....
please medam...
tell my mother...
ok.. bye..

என்று கூறியவள்
தனது பதிலுக்கே காத்திராமல் போனை வைத்ததும்
தனது தாய்மொழியையே மறந்து இங்கிலீசிலயே
முழுக்கவே கதைத்ததும்
வெள்ளைக்கார நண்பனுக்காக
தன்னுடன் பொறுமையாக கதைக்காததையும்
நினைத்து எரிச்சலடைந்த ரீச்சர்,
தற்போதய மனிதர்களின்
நாகரீக மோகத்தை நினைத்து வியந்ததுடன்
தனது பிள்ளைகளைநன்றாக வளர்க்க வேண்டும் என்ற உறுதியுடன்
போனை பரிமளத்திடம் கொடுத்து விட்டு
நன்றி சொல்லி வெளியேறினார்.

Print this post