Tuesday, April 22, 2008

அவன் கேட்ட சீதனம்


செவ்வாழை நிறத்தவள்
அம்மாளை போன்்றவள்
எந்நாளும் அவள்் முகத்தை
பார்த்தாலும் அவா அடங்கா....!

கரு நிறக் கூந்தலுக்கு
கருவேப்பிலை தைலம் தடவி
நடு உச்சி பிரித்து
ஒற்றைச்சடை பின்னலிட்டு
கன்னக்குழி விழ சிரித்து
என்னை விழ வைத்தவள்.....!

அவள் செல்லக் கதை கேட்டு
இவன் சிறையில் விழுந்தவன்
எழுந்தும் மீள விழுந்தேன்
விழுந்தது சொர்க்கம் என்பதால்...!

கிடைத்த சொர்க்கம் தொடர்ந்திருக்க - அவளை
படைத்த பெற்றோர் சூழ்ந்திருக்க
ஆழ்ந்து பேசி, என் விருப்பம் சொல்லி - அவளுடன்
வாழ்ந்து விட ஆசைப்பட்டேன், என் வாழ்நாள் முழுதும்....!

சீதனம் என்னவென படைத்தவர் கேட்க,
மூலதனம் அவள் தான் அதை கொடுங்கள் போதும்.
சீதனம் என்று இவன் கோபத்தை கிளற வேண்டாம்,
வேதனை தான் மிஞ்சும் என எகிறி நின்றான்...!

அவளிடம் கேட்கிறேன் சீதனம்.....
அதை அவள் கொடுத்தால் போதும் எனக்கு...!

என்றும் என்னருகில் அன்போடு இரு.
என் துன்பம் நீங்க, நீ சிரிப்போடு இரு.
என் கோபம் அடங்க உன் கோபம் அகற்று.
நான் சந்தோசமாக இருக்க நீ சந்தோசாமாக இரு.
ந ீசந்தோசமாக இருந்தால்
நாம் எல்லோரும் சந்தோசமாக இருப்போம்.......!

சீதனம், சீர்வரிசை சிறியோர் பேச்சு,
வேதனை பார் வரிசையில் பெருகிப ்போச்சு
பெண்கள் ஓர் வரியில் பலமாக நின்றால்
ஆண்கள் பின் வரியில் காத்திருப்பர் பெண்களுக்காய்...!

சீதனம் கூடவாங்கி திருமணம் செய்தவன்,
பிழை பிடிக்கிறான் பெண்டிலில் ஈசியாக
வாழ நினைக்கிறான் வாழ்க்கையில் ஓசியாக
தாழ வைக்கின்றார் அவனை, பெண் பெற்றோர்....!

ஊரிலே பல கதைகள் பரவுகின்றன..
அவளில் பல குறைகள் இருக்காம்,
அதனால் சீதனம் பலமாக இருக்காம்.
அவள் குறை தெரிந்து கட்டிகிட்டானாம்.
அதனால் கேட்டானாம் கூடுதல் சீதனம்....!

வீண்வம்பை விலைக்கு வாங்கும் பெற்றோரே
ஊர் வம்பை கேட்டிடுவீர் படைத்தோரே
யார் வம்பும் வராது உங்களுக்கு
நிறூத்திடுவீர் சீதனத்தை - உங்கள்
பிள்ளை நலம் வாழ........!!!

Saturday, April 19, 2008

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் வீட்டிலேயே இருந்து கும்மாளமடித்துக்கொண்டிருந்தார்கள். சிவத்தாரின் இரு தோள்களிலும்
சிவசங்கரும், ஜெய்சங்கரும் இருந்து கொண்டு அவரின் காதையும்,
வாயையும் பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

தர்சினி, கீதா, தீபா, தாரணி, மதுரா, ஐவரும் சாரி உடுத்தி, தலையில் மல்லிக்கைப்பூ சூடி, குங்கும பொட்டு வைத்து, ஒன்றாக இருந்து போஸ் குடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அம்மா..! இஞ்சை ஒருக்கா வந்து பாருங்கோவன்.... என்று மதுரா கூப்பிடவும், அடுப்படியில் சமையலில் இருந்த மரகதம், அடுப்பில் நெருப்பை
குறைத்து விட்டு வந்து, திண்ணையை எட்டிப்பார்த்து, திகைத்துப்போனாள்.

என்னடி இது விளையாட்டு...? உங்களுக்கு வேளையோட கலியாணத்தை கட்டி குடுத்தும் உங்களின்ர அட்டகாசம் குறையேல்ல... என்று சொல்லியபடி அடுப்படிக்கு திரும்பிய மரகதம், இப்படியே எல்லோரும் பாசமாக, ஒற்றுமையாக இருக்க வேணும் என தங்கள் குல தெய்வமான சன்னதி முருகனை மனதினுள் பிரார்த்தித்துக்கொண்டு வேலைகளை கவனிக்கலானாள்.

சிவத்தாரும், மரகதமும் திருமணம் செய்து ஐந்து பெண் பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தார். விதானை வேலை பார்த்தாலும், மேலதிக வருமானத்திற்காக சிவத்தார் வீட்டில் சின்ன
தோட்டம் ஒன்றும் வைத்திருந்தார். மரகதமும் பிள்ளைகளும் சிவத்தாருக்கு உறுதுணையாகவே இருந்து வந்தார்கள்.

ஐந்து பெண் பிள்ளைகளை பெற்றவருக்கு ஏக்கங்கள் இருக்க தானே செய்யும். படிப்பு, உடுப்பு, சாப்பாடு, என செலவுகள் அதிகமாச்சே.. அதைவிட யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை, சீதனம் என்றும் ஒன்று உள்ளதே..!

ஐந்தும் பெண் பிள்ளைகளாக போச்சு, ஒரு ஆண் பிள்ளை இல்லையே என்று மனதளவில் சிறு கவலை இருந்தாலும் ஐந்து பிள்ளைகளின் படிப்புத்திறமை, அழகு, சுட்டித்தனமான விளையாட்டு, ஒவ்வொருத்தர் மீதும் வைத்திருந்த பாசம் என்பன அந்த கவலையை அடியோடு மறக்கடிக்கச் செய்திருந்தது.

Friday, April 18, 2008



கோலாலம்பூர்
மஹா மாரியம்மன் கோவிலில்
சித்திரைப் பொங்கல்(புத்தாண்டு)
கொண்டாட வந்த சீனப்பெண்மணி ms.wong
தமிழ் கலாச்சாரத்தில்...,
பொட்டு, சுடிதார் அணிந்து...,
அர்ச்சனைத்தட்டுடன்....!

Tuesday, April 15, 2008

பச்சையாக சொல்கிறேன் நான்...,அவளை ரொம்ப பிடிச்சுப்போச்சுது எனக்கு.....!


கோலாலம்பூர் கோட்டுமலையான் கோயிலிலே..,
தீபத்திருநாள் கொண்டாட்ட கூடலிலே..,
முண்டியடித்து பக்தர்கள் குதூகலிக்கையிலே.....,
குண்டுமணி போல வந்து நிண்டு கொண்டிருந்தாள்,
ஓர் இளமங்கை...!

மல்லிகை பூச்சூடி ......
மறூண் கலர் தாவணி அணிந்து...,
பந்தா ஏதுமின்றி, தந்தையாருடன்...
வந்தாள் கோவிலுக்கு அர்ச்சனைத்தட்டோடு...!

அவளை கண்டதும், உதித்து மலர்ந்தது,
என் மனதினுள், புது சூரியன் ஒன்று..
மெய் மறந்து போனேன் நான் - இது
மெய் தானா எனக்கேட்டு...!

அனைத்து கண்களும், அவள் மீது பட,
அத்தனை கண்களையும், ஏமாற்றி விட்டு...,
எனையளைத்து.... வாழ்த்து சொன்னதும்..,
ஏங்கிப்போனேன் நான்......
துடித்தது இதயம் படபடவென...
வெடுக்கென சொன்னேன் என் தீபாவளி வாழ்த்து...!

அவள் பார்வையிலும் பேச்சிலும்
மயங்கி கிறங்கிப்போனேன் நான்....!

சாப்பிட நானழைத்து, உட்கார்ந்து கொண்டதும்...,
இட்லி, தோசை என ஓடர் குடுத்தாள்...
விரும்பிச்சாப்பிட்டேன் வேண்டாத தோசையையும்,
கரும்பிலும் இனித்தது, புளித்த தோசையும்....!

சாப்பிட்டு முடித்து காசு கொடுக்கவும்.....,
கை பிடித்து, தடுத்து, அவள் நீட்டவும்....,
நான் ஒரு பார்வை பார்க்க.. அவள் அமர்ந்து கொண்டதும்...,
மறக்க முடியவில்லை எனக்கு...!

அனுமதி கேட்டு, அவள் படம் பிடித்து,
அடிக்கடி அவளை, பார்த்து நினைத்ததும்....,
தந்திரமாக, தொந்தரவின்றி சம்மதம் கேட்க....,
சந்தோசத்தில் மிதக்க வைத்தாள்......
தன் சம்மதம் சொல்லி...!

வெட்கத்தை விட்டு...,
பச்சையாக சொல்கிறேன்.. நான்...,
சத்தியமாக அவளை ரொம்ப....,
பிடிச்சுப்போச்சுது எனக்கு.....!

Saturday, April 12, 2008

நாகரீக மோகம்......


11 மணியாகியும் மாக்கற்றுக்கு போன மனிசன
இவ்வளவு நேரமாக காணோம்.....
என அலுத்துக்கொண்ட பரிமளம் வாசலை எட்டிப்பார்த்தாள்.
பாதையில் மாலினி ரீச்சர் நடந்து போவதை கண்டவள்...,

"ரீச்சர்.... ரீச்சர்... இஞ்சை ஒருக்கா பாருங்கோ.....
நான் இஞ்சினியர் தர்சினியின்ர அம்மா... ரீச்சர்...."
தன்னை யாரோ கூப்பிடுவது போல இருக்கவே
திரும்பிப்பார்த்த ரீச்சர்..,
பரிமளத்தை கண்டு - கிட்ட வந்து -
"ஓ... நீங்களா? எப்படி இருக்குறீங்க....தர்சினி எப்படி இருக்குறாள்...?
" நாங்கள் நல்லா தான் இருக்கிறம். தர்சினிக்கும் என்ன குறை......
வாங்க ரீச்சர் - ரீ குடிச்சிட்டு போகலாம்..."
என்ற பரிமளம் வீட்டுக்குள் கூட்டிச்சென்று உட்கார வைத்தாள்.

"ரீச்சர்.. கூலா...? ஹொட்டா.... குடிக்குறீங்க..."
"வெய்யில் கண்ண எரிக்குது..
கூலா இருந்தா குடுங்க.. நல்லா இருக்கும்..."

ரீச்சருக்கு வண் மினிற் சொன்ன பரிமளம்
வேலைக்காரிக்கு ஓடர் போட்டாள்...
"கலா.... தர்சினியின்ர ரீச்சர் வந்திருக்கிறா...
நல்ல கூலா fresh apple juice எடுத்திட்டு வா..
அத்தோட ப்றிஜ்ஜில கேக்கும் இருக்கு - எடுத்திட்டு வா..."

"சொறி ரீச்சர்.. தர்சினியின்ர அல்பம் பார்க்குறீங்களோ..?"
"ஓமோம் குடுங்க.. அவளையும் பார்த்து கன காலம் ஆச்சுது..."

பரிமளத்திடம் அல்பத்தை வாங்கி பார்த்த ரீச்சர்...
"ஓ முதல் மாதிரி நல்ல ஸ்லிம்மாகவே இருக்கிறாள்...
இது ஆர் பெடியன்..."
என்று தர்சினியுடன் நெருக்கமாக இருந்தவனை காட்டி கேட்டா

"ஓ இதுவா...
இவர் தர்சினியோட வேலை செய்யிறவராம்...
தமிழன் தான்..
ஆனால் தமிழ் பேச வராது...
தமிங்கிலிஷ் தான்....
எங்கயாவது ஒரு சொல்லு போட்டு
காலங்களை மாத்தி மாத்தி
ஏதோ ஒரு மாதிரி தான் சொல்லுவார்.

Monday, April 7, 2008

எல்லாமே ஏக்கங்களாய்.....!











எந்த வயதினிலும்,
பாசத்தோடு சோறூட்டி விட,
எப்போதும் என்னருகில் வேண்டும்...,
என் அருமை தாய்.......!

சோகத்தில் நான்..,
துவண்டிருக்கும் போதெல்லாம்....,
அன்போடு... தலை வருடி.... அணைத்து,
ஆறுதல் சொல்ல....,
என் மனைவி....!

என் நெஞ்சினிலே ஏறி....,
தன் பஞ்சுக்கால்களால் உதைத்து....,
மஞ்சமென நினைத்து...,
மெய் மறந்து தூங்க...,
என் மகன்....!

அப்பா.... அப்பா... என்று,
வாய் நிறைய கூப்பிட்டு .,
பாசத்தைப் பொழிந்து...,
குடும்பக் குலவிளக்காக...,
என் மகள்...!

அக்கா.... அண்ணா......,
தம்பி..... தங்கா....,
மச்சான்.... மாமா.....,
பாட்டன்..... பாட்டி... என்று,
பாசமுடன் நானழைத்து....,
அன்போடு ஆதரிக்க...,
என்னருகில்... என்றென்றும்..,
என் உறவுகள்...!

கூடிக்குலாவி கும்மாளமடித்து....,
கிட்டிப்புள்ளு விளையாடி...,
நெஞ்சத்தில் வஞ்சமின்றி...,
பஞ்சியில் படுத்துறங்க...,
என் வீடு...!

நாடு நாடாக, நாயாக அலைந்து....,
தேடும் சொத்து, சீர்வரிசைகளை....,
சீரழியாமல்... ஆண்டு அனுபவிக்க...,
அமைதியாக.. அழகாக...,
என் நாடு......!

எல்லாமே ....,
ஏக்கங்களாய்.....!
என்னை வெல்ல யாருமில்லை......,
என்னருகில் அனைத்தும் இருந்தால்.......!!!

Sunday, April 6, 2008

அவர்கள் காதல் திருமணம் செய்தவர்களாம்…!




















அம்மாடி…….!
சாப்பிட்டீங்களா….?
எப்படி இருக்கிறீங்கள்……?
உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்க…….!
தொலைபேசியில்..,
கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தார்..,
அப்பா..,
அம்மாவிடம்……!
அவர்கள்
காதல் திருமணம் செய்தவர்களாம்…!

உனக்கு....,
நல்ல மாப்பிள்ளை ..,
பார்த்துப் பேசி கட்டலாம்…..,
காதல் எல்லாம் கூடாது……!
நண்பனுடன் தொலை பேசியில் பேசிய மகளுக்கு….,
அறிவுரை சொன்னார் அப்பா….!!!

THOUGHTS



I do not care for liberation, I would rather go to a hundred thousand hells, doing good to others (silently) like the spring this is my religion.

Swami Vivekananda


Determine that things can and shall be done, and then we shall find the way.

Abraham Lincoln-


Whatever you can do or dream you can, begin it. Boldness has genius, power and magic in it. Begin it now.

-Goethe-

Saturday, April 5, 2008

வெறுத்துப்போனாலும் பொறுத்தே போகிறேன்…!



பஞ்சணையில்
நெஞ்சணைத்து
படுத்துறங்கியது பல நேரம்…….!
வேட்கையிலே உதடிணைத்து
கொஞ்சி மகிழ்ந்தது பல நேரம்……!!

விழியோடு விழி பார்தது
விசும்பு பேசியது பல நேரம்……!
மூச்சு முட்ட கட்டிப்பிடித்து
உருண்டு புரண்டது பல நேரம்……!!

கொஞ்சி முடித்து குதூகலித்து
வெறுத்துப் போச்சுதிப்போ……!
நாச்சியாரை வெறுத்துவிட....,
மாமியாரை ஏவுகிறான்…….!!

மாமியாரின் கொடுமையிலே
மண்ணே மக்கி உக்கிப் போகும்…!
தண்ணிக்கே விக்கல் எடுத்து விடும்……!!

சோகத்தில் அவள்…!
போதையில் அவன்…!!

காதலிக்கும் போது
கண்ணியம் கதைப்பார்…!
கல்யாணம் முடிந்ததும்
காலால் உதைப்பார்…!!

ஏனிந்த அவலம்
பெண்களுக்கு மட்டும்…?
பெண்ணவளுக்கு எதிரி
பெண்ணும் கூடத்தான்…..!

அத்தானை…. மச்சானை….
மாமாவை….. நண்பனை…..
யாரைத்தான் நம்புவது
இந்தக் காலத்தில்...…?

பெண் என்றாலே...,
காமப்பார்வை பார்க்கும்,
கயவர் கூட்டம்
பெருகிப் போச்சு…..!

என்ன செய்வேன் நான்…?
பெண்ணாகி விட்டேன்….
வெறுத்துப்போனாலும்
பொறுத்தே போகிறேன்…!

கல்யாணமாகி…..
கருவிலே உரு வரவில்லை….
தருவிலே சந்தேகம்
அந்த அயோக்கியனுக்கு……..!

யோக்கியம் பேசும்
மனிதர்கள் எல்லாம்
யோக்கியர் தானா சொல்லுங்கள்
உங்கள் மனதை தொட்டு…..!!!

Tuesday, April 1, 2008

கண்முன்னே தெய்வம் இருக்க...,








அம்மா.......,

உலகத்தின் பொது மொழி..
அனைவரும்
அறிந்த மொழி...
விலங்குகள்
உட்பட,
உயிரினங்களுக்கும்
தெரிந்த மொழி.....!


பிரபஞ்சத்தில் தாய்....,

உயிரினங்களின் ஆரம்பம...
ஆரம்பகட்டத்தின்
வளர்ச்சி...
பாசத்தின்
திற்வுகோல்....
பண்பின்
உறைவிடம்....!

கண்முன்னே தெய்வம் இருக்க...,
கல்லையே
கும்பிடுவோர்...,
கண்
தெரிந்த குருடர்,
காது
கேட்கும் செவிடர்......!

உன்னை படைத்த தாயை...
ஒருசொட்டும்
கலங்காது,
காத்துப்
பார்த்திரு....
தேடிவரும்
உன்னை..,
செல்வம்
செல்வாக்கெல்லாம்......!

அம்மா என்ற சொல்லுக்கு..,
பொருள்
சொல்ல, மொழி இல்லை...
அம்மாவுக்கு
விளக்கம்,
அம்மா
என்பது மட்டும் தான்....!

உனக்காக பிரார்த்திக்கும்....,
தாயை
நீ வணங்கிட்டால்...,
உலகத்தில்
கொடுத்து வைத்தவன்..
உன்னை
விட யாருமில்லை....!

தாயை நேசிப்பவன் தான்......,
தாய்
நாட்டை நேசிப்பான்.
தாய்
நாட்டை நேசிப்பவன் தான்...,
தாயையும்
நேசிப்பான்....!

தாயை நேசிக்காதவன்...,
தாய்
நாட்டை தூசிப்பான்....
தாய்
நாட்டை தூசிப்பவன்....,
தாயையும்
தூசிப்பான்......!