Thursday, May 1, 2008

முத்தமொன்று நான் கொடுத்தேன்,

சித்திரையின் பத்திலே
முத்தமொன்று நான் கொடுத்தேன்,
சத்தமின்றி பெற்றுக்கொண்டாள்
முத்துமணி என் தேவதை.

அவள் தோளில் கை போட்டு
தலை வருடி, இறுக அணைத்து
இதழோடு இதழ் பதித்து
முத்தமொன்று நான் கொடுத்தேன்,
கொவ்வை பழம் போல் சிவக்கும் வரை......!

இதழ்களில் இருந்து கீழிறங்கி
முத்துக்கள் இரண்டிலும்
இச் என்ற சத்தத்துடன்
முத்தமொன்று நான் கொடுத்தேன்
முல்லையவள் வெட்கத்தில் சிரிக்கும் வரை......!

கட்டி அணைத்து, கட்டிலில்
முட்டி ப்போட்டு, முகம் புதைத்து
வெட்டிப்பயல் இவன் வெட்கமின்றி
முத்தமொன்று நான் கொடுத்தேன்
மூச்சிருக்கும் வரை நினைத்திருக்க.....!

வாழ்வெல்லாம் இனித்திருக்க
வாழ்வின் சுவை நாமறிய
காதல் வேர் ஆழ்ந்து ஓட,
முத்தமொன்று நான் கொடுத்தேன்
ரத்தமெல்லாம் கொதிக்கும் வரை......!

நெஞ்சமெல்லாம் துடி துடிக்க
அங்கமெல்லாம் அனலடிக்க
தூக்கமின்றி தவிக்கின்றேன் நான்
தமிழ் மகன் எனை தூக்கி
தாலாட்ட வாடி குட்டி
உன் முத்தமின்றி என்னால், முடியவில்லை
உலகத்தில் நிலைத்து வாழ்ந்திட......!

Print this post

2 comments:

Anonymous said...

Dear mr.sivanaathan, your poem is very nice. you marry your dream girl early. we wish your all of success life.

Unknown said...

நன்றி Anonymous. வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்யவுள்ளோம். உங்களது தொடர்புக்கு மின்னஞ்சல் கொடுத்திருந்தால், அழைப்பிதழ் அனுப்பியிருப்போம்.