முதன் முதலாய் நீ என்னை பார்த்தபோது,
பார்க்கவில்லை நான் உன்னை, வெட்கத்தில்.....!
என்னிடம் நீ பேசிய போது பேசவில்லை நான்,
தந்தியடித்தது என் நாக்கு.., தரவு ஏதுமின்றி....!
என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு..,
ரசித்துச் சொன்னாய்.. என் சமையலை.....!
"ருசித்துச் சாப்பிட்டேன், உன் கைராசிக்கு
குடுத்து வைச்சவன் யாரென்று......."!
கள்ளச் சிரிப்போடு கை காட்டிச் சென்றாய்..
சந்தோசப்பட்டேன் நான் சந்தேகத்துடன் காரணம் தெரியாமல்...!
தொலை பேசியில் தினம் கதைத்து வணக்கம் சொன்னாய்,
ரசித்தேன், ரசித்து குதித்தேன் துள்ளி.......!
அர்த்தம் என்ன இதுக்கு என்று
துடித்துக் கேட்டது என் இதயம்....!
உன் வாழ்வின் உதயம் காண
கேட்டுவிடு அவனிடம் அர்த்தத்தை....!
தேடினேன் நாளொன்று... தேர்ந்தெடுத்தேன் தீபாவளியை,
அழைத்தேன் அவனை, தேவன், தேவி கோயிலுக்கு...!
தேவனின் கோவிலில் தேடினேன் அவனை....
தேய்ந்தது என் மனம் காணவில்லை அவனை என்று...!
தேவியின் கோவிலில் கண் மூடி வேண்டினேன் - என்
தேவனைக் காட்டு இப்போதே... என் முன்னால்.....!
கண் விழித்து பார்த்த போது, கையில் பூமாலை தந்து
வீபூதியிட்டார் என் நெற்றியில், குருக்கள்....!
தேவியின் சம்மதத்துடன், அவன் தர்சனமும்
கிடைக்கும் என்றெண்ணி திரும்பினேன்.. கண்டேன் அவனை...!
முருகனின் முன்னால் நின்று
என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்....!
அவனது பார்வையை மறக்க முடியவில்லை எனக்கு...
நினைவிருக்கு.. இப்பவும் அந்த ஐப்பசி இருபத்தொன்றை....!
சாப்பிட நானழைத்து, அப்பாவும் நானும்
அவன் கூட சாப்பிட்டது, இட்லியும் தோசையும்...!
முடிந்ததும் எடுத்தான் போட்டோ.... எம்
அனுமதியுடன் அப்பாவையும்.., என்னையும்.....!
ஊர், பேர் விசாரித்து.., உறவுகள் விசாரித்து...,
பலப்படுத்திக் கொண்டோம், எமது உறவினை......!
டிசம்பர் ஒன்றில் சந்தித்து பகிர்ந்து கொண்டோம்,
எம் காதலை மென்மேலும்....!
விதைத்து, முழைத்து, வளர்ந்து விருட்சமாகி
இருக்கிறது.. எம் காதல், ஒன்றரை வருடமாக...!
அவனை விட்டு என்னால், இருக்க முடியாது,
கடைசிவரை.................!!!!!!
எழுதியவர் ; ஜெய்.
Saturday, May 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment