Monday, July 1, 2013

தந்தையர் தினம்



"உங்களுடைய அப்பா என்ன வேலை? "

" Engineer..."

"உங்களுடைய அப்பா...?"

" Doctor...."

"உங்களது..."

" Teacher....."

"உங்களது..."

" He is in Home"

" No problem.... what was his job before "

" He always is in the house ...
Clean the Kitchen and house and washe the vessels..."

எல்லோரும் பெரிதாகவே சிரித்து அவனை சேலி செய்தார்கள்.

" உனது அப்பா என்ன சோம்பேறியா.....? இன்னும் ஏதேதோவெல்லாம் கேட்டு கேலி பண்ணினார்கள். அன்று முழுவதும் அவன் சோகமாகவே காணப்பட்டான்.


அன்று தந்தையர் தினம். அதனால் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தந்தையார் என்ன வேலை செய்கின்றார்கள் என்று கேட்டுக்கொண்டு வந்து, அபியிடம் கேட்ட போதே அவன் அந்தப் பதிலைச் சொன்னான்.


அபிக்கு 6 வயதாகிறது. ஆண்டு 01 படிக்கிறான். அவன், அவனது பெற்றோருடன் ஒரு அகதி தடுப்பு முகாமில் எந்த விதமான உறுதியான காரணங்களின்றி 4 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறான்.


அபிக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவனது தந்தை எந்த வேலையும் செய்வதில்லை.
அவர் வீட்டில் தனது மனைவிக்கு சமையலில் உதவி செய்வது.... பாத்திரங்கள் கழுவிக் கொடுப்பது.....
தங்கியிருக்குமிடத்தினைத் துப்பரவு செய்வது,
என்று இவைகளைச் செய்வதைத் தான் அபி தனது கண்களால் பார்த்திருக்கிறான். ஏனென்றால் அவன் தடுப்பு முகாமினுள் வரும் போது அவனுக்கு 2 வயதே தான் ஆகியிருந்தது.


அந்த நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் சிறுவர்கள் அனைவரும் பெற்றோருடன் தடுப்பு முகாம் காவலர்களால் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூட்டி வரப்படுவார்கள்.


அபி பாடசாலை விட்டு வந்ததும் புத்தகப்பையைக் கூட அலுமாரியில் வைக்காது நேராகத் தந்தையாரிடமே சென்று

" அப்பா...... நீங்க என்ன ஜொப் செய்யிறீங்க......?"
என்று கேட்டான்.


தகப்பனாரும் என்ன திடீரென்று வந்து இப்படிக் கேட்கிறானே என்று அவனைக் கட்டி அணைத்துக்கொண்டு


" நான் முதலில் ஒரு முதலாளி. ....
ஆனா இப்போ...
இங்கே எனக்கு எந்த வேலையுமில்லை......"

என்று கவலையுடன் சொன்னார்.


" நான், உங்களுக்கு வேலை ஒன்றுமில்லை என்று, அதைத்தானே வகுப்பில் சொன்னேன். ....
ஆனால் அவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்....
பிறகு ரீச்சர், உங்கடை அப்பா என்ன வேலை செய்யிறவர் என்று கேட்டார். ...
அதுக்கு நீங்கள் வீட்டில் கூட்டுறது....
கிச்சின் கிளீன் பண்ணுறது ....
பாத்திரம் கழுவுறது...
என்று சொன்னேன்.

எல்லோரும் பெரிசாகச் சிரிச்சு என்னை ரீசிங் பண்ணினம் அப்பா......"

என்று சொல்லி அப்பாவியாகப் பார்த்தான் தந்தையை.


அபியை இறுகக் கட்டியணைத்த தந்தைக்கோ, தனது பழைய காலத்தில் இருந்த வளங்களையும், இப்போ தடுப்பு முகாமில் தேவையின்றித் துன்பப்பட்டு கொண்டு  பிள்ளையின் கேள்விக்கு சரியான முறையில் விளக்கம் கொடுக்க முடியாது தத்தளித்தவருக்கு நீர் கண்ணை முட்டியது.

Print this post

No comments: