Sunday, April 21, 2013

போக்குவீரா என் துன்பம்





காலை வணக்கம் சொல்லி என்னை

கட்டி அணைத்து உச்சி முகர்ந்து

எழுப்பி என்னைத் துாக்க வேண்டும்



குளிக்கும் போது முதுகு தேய்த்து

சோப்புப் போட்டு தண்ணீர் ஊற்றி

கழுவி என்னைத் துடைக்க வேண்டும்



தலை முழுக சம்புூ போட்டு

கசக்கித் தேய்த்து தண்ணீர் ஊற்றி

துவாயால் உலர்த்தித் துவட்ட வேண்டும்



தணல் எடுத்து சாம்பி ராணியிட்டு

முடிக்கு அகிற் புகையும் இட்டு

மணம் பரப்பச் செய்ய வேண்டும்.



சோறு எடுத்து கறியும் விட்டு

பிசைந்து அதனைக் கவளம் ஆக்கி

வாயில் வைத்து ஊட்ட வேண்டும்.



உண்ட களைப்பில் ஓய்வு எடுக்க

உந்தன் மடியில் சாய்ந்து நானும்

குட்டித் துாக்கம் போட வேண்டும்.



எப்பொழுதும் ஏக்கமாக இருக்குமெந்தன் ஆசையினை

எப்போதும் என்னருகில் இருப்பதற்கு வழிசெய்து

போக்குவீரா என்துன்பம் பொன்னாரின் மேனியனே...?

Print this post

No comments: