நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்கள் வாழ வேண்டும்
என்று நினைப்பது உத்தமமான எண்ணம். அதேநேரம் ஆசையை
வளர்த்துக்கொண்டு போனால் ஆத்ம அபிவிருத்தி என்பதே இல்லாமல்
போய் விடும்.
சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி.
எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ அவ்வளவு
எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
விடயம்.
வயிற்றுக்கு உணவு ,மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளிய வீடு
இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும் பெறவேண்டும்.
இதற்கு மேல் ஆசை மேல் ஆசை தேவைக்கு மேல் தேவை என்று பறக்க
வேண்டியதில்லை.
நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்கு செய்யும்
மிகப்பெரிய பரோபகாரம்.
கிணற்றில்நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதி்ல்லை.
ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை
நம்மால் உணர முடிகின்றது.
எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரிய மரங்களை தண்ணீரில்
போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல்
நம்மை துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம் எனம் தண்ணீரில் ஆழந்து
விட வேண்டும்.
அப்போது துன்ப விடயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத்
தொடுவதே இல்லை.
நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரம லேசாகிவிடும்.
Sunday, September 21, 2008
Sunday, September 14, 2008
விண்ணுயரப் பறந்த நட்பு....!!!
கிஞ்சித்தும் இரங்காமல்
வஞ்சித்து விட்டாய் - நீ
கெஞ்சிக் கேட்கிறேன்
தண்டித்து விடாதே...!
கண்ணிமைக்கும் நேரத்தில்
கருத்தோடிப் போனது
விண்ணுயரப் பறந்த நட்பு
வீணாகிப் போனது....!
விண்ணனானேன் உன்னால்
விரும்பிய துறையினில்
நன்றி உனக்கு சொல்வேன்
நாள் தோறும் என்வாயால்....!
கெட்டவனைத் தேடிய தர்மனுக்கும்
நல்லவனைத் தேடிய துரியோதனனுக்கும்
கடைசியி்ல் கிடைத்த பதில்
யாருமில்லை என்பது தான்....!
அவரவர் சிந்தனையோட்டத்திலேயே
கருத்துக்களை புரிந்து கொள்வர்
நல்லதாய் நினைத்தால் நல்லது
கெட்டதாய் நினைத்தால் கெட்டது....!
சந்தேகம் என்பது
செருப்பில் தைத்த முள் போல
எடுக்காது விட்டால்
குத்திக்கொண்டே இருக்கும் ....!
எடுத்துவிடு சந்தேகத்தை...!
தவிர்த்துவிடு தாழ்வு மனப்பான்மையை....!!
வளர்த்துவிடு சந்தோசத்தை.....!!!
கொடுத்துவிடு நட்புக்கு இலக்கணத்தை......!!!!
Friday, September 12, 2008
Tuesday, September 9, 2008
உறவுகளை மேம்படுத்திக் கொள்ள.....!!!
குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில்
விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலும்
பெரிதாகாமலும் இருப்பதற்கு...
** நானே பெரியவன், நானே நிறத்தவன் என்ற அகந்தையை (Ego)
விட்டொழியுங்கள்
** அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்
கொண்டே இருப்பதை தவிர்த்து விடுங்கள்.
** எந்த விசயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காக
கையாளுங்கள் (Diplomacy). விட்டுக்கொடுங்கள்(Compromise).
** சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான்
ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
** எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும் அவர்கள் சம்பந்தம்
உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
** உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்
கொஞசம் தளர்த்திக் கொள்ளுங்கள்(Flexibility).
** மற்றவர்களுக்குரிய மரியாதையை கொடுக்கவும், இனிய
இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்(courtesy).
** புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை
சொல்லவும் கூட நேரமில்லாதாது போல் நடந்து
கொள்ளாதீர்கள்.
இந்தக் கட்டளைகளின் படி நடந்தால் உறவுகள் நிச்சயமாக
மேம்படும்.
Thursday, September 4, 2008
Tuesday, September 2, 2008
எதிரியை விட துரோகியே ஆபத்தானவன்....!!!
சகுனி வேலைகளில் தேர்ச்சி பெற்றவர்
சந்தர்ப்பத்ததிற்கேற்ப கதைகள் புனைந்து
குசினி வேலைகளில் தம் திறமை காட்டி
கூட இருந்தே குழி பறிப்பர்....!
நண்பர்கள் மத்தியில சச்சரவுண்டாக்கி
பண்பர்கள் போலே நடந்து கொள்வர்
வீண்பழி சுமத்தி கீழே வீழ்த்துவர்
துரோகிகள் சேர்ந்து தாழ்ந்து தூற்றுவர்..!
முன்னுக்கு நல்ல பிள்ளையாட்டம்
பின்னுக்கு கள்ள சீட்டாட்டம்..!
வழிய வழிய சிரித்துப் பேசி
அழிய வைப்பர் எமையெல்லாம்
கழிய இவர் துன்பமெல்லாம்
தனிய செல்ல வேண்டும் நாம்....!
தன்வேலை முடியும் வரை அண்ணன் என்பர்
பின் வேலை முடிந்ததும் மடையன் என்பர்
கிறுக்கன் இவனையெல்லாம்
முருக்கங்காய் போலே சப்பித்துப்ப வேணும்...!
குறுக்கு வழியிலே காரியம் பார்தது
நறுக்குவர் நல்லவர் நரம்பையெல்லாம்
வெறுத்து ஒதுக்குவர் பெரியோரெல்லாம்
சிறுத்து சிதறும் பாதித்தவர் உள்ளம்...!
மனச்சாட்சி என்பது உளச்சாட்சி
மற்றவன் சொல்வது பஞசாயத்து
உனது சாட்சிக்கு நீ கட்டுப்பட்டால்
திருந்தலாம் உலகில் நல்லவனாய்....!
பொறாமை கொண்டு மற்றவனை வீழ்த்தி
அடையும் லாபம் ஒன்றுமில்லை.
போட்டி போட்டு நீயும் செய்
பொறாமைப்பட்டு குழி பறிக்காதே...!
ஒன்று சொல்கிறேன் கவனமாக கேள்
நன்று செய்தால் நலமுடன் வாழ்வாய்
வென்று வருவாய் உலகை எல்லாம்
இல்லையேல்
நரகத்தை உண்ணும் பன்றி போலே
பரலோகத்தில் வாழ்வதை விட
மரித்துப்போ மற்றவர் நலம் வாழ....!!!