Tuesday, March 12, 2013

தொலைபேசியும் தொந்தரவும்.



கைத்தொலைபேசி


தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, சகல வசதிகளையும் உள்ளடக்கிய, அனைவரலும் பாராட்டப்பட்ட, இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு இரண்டு என்னும் வீதத்தில் பாவிக்கப்படும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத அங்கமாக உள்ளது கைத்தொலைபேசி.


ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒரு செய்தி அனுப்புவதற்கு பத்துப் பேர் பலத்த பாதுகாப்புடன் பல நாட்கள் பயணம் செய்தார்கள். ஆனால் இன்று இந்த உலகத்தையே ஒரு வீடாகச் சுருக்கி எமது உள்ளங்கையில் கொடுத்துள்ளது தொழில்நுட்பம்.


உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் நேரில் பார்த்துப் பேசுவது போல் இணையம் மூலமாக ஒருவரைப் பார்த்து ஒருவர் நினைக்கும் நேரத்தில் பேசி விடலாம்.

அப்படிப்பட்ட அரும் பொருளாக அனைவராலும் விரும்பப்படும் அத்தியாவசியப் பொருளாக; அன்பினை வளர்த்துக் கொள்ளும் இணைப்புப் பொருளாக; வசதியை வளர்த்துவிடும் வாணிபப் பொருளாக; அத்தியாவசியச் செய்திகளை உடனுக்குடன் பரிமாறி மற்றவரைக் காப்பாற்றும் காத்தல் பொருளாக; இன்னும் எத்தனையோ வசதிகளை எம் காலடிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பொருளாக கைத்தொலைபேசி உள்ளது.


இவ்வளவு வசதிகளைக் கொண்டதாக கைத்தொலைபேசி உள்ள போதும், அதனை தமது வாழ்க்கைக்கு இடைஞ்சலாக; சுமையாக; இருப்பதாகவும் நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


ஏனென்றால் கைத்தொலைபேசியின் அருமைகள்; அதனால் செய்யக் கூடிய வேலைகள்; அதனால் வளர்க்கக்கூடிய உறவுகள்; என்று பலவிதமான நன்மைகளை அறிந்து கொள்ளாதவர்கள் தான் அதனை சுமையாக நினைக்கிறார்கள்.


உரையாடல் - 01


அரவிந்தன்: ட்றிங்... ட்றிங்.....

கஸ்தூரி: ட்றிங் ..... ட்றிங்...... திஸ் இஸ் ரியூன்ரோக் வொயிஸ் மெயில் றெக்கோடிங்   சிஸ்ரம்................


என்று குரல் வழித் தகவல் சென்று கொண்டிருந்தது. எரிச்சலுடன் தொடர்பைத் துண்டித்தான் அரவிந்தன்.

பத்து நிமிடத்தின் பின்னர் மீண்டும் தொடர்புக்கு முயற்சி செய்தான். வழமைபோன்று குரல்வழித் தகவலுக்கான செய்தியே போய்க்கொண்டிருந்தது. இவ்வாறு நான்கு அல்லது ஐந்து தடவைகள் முயற்சி பண்ணியும் கிடைக்காததால் கோபத்துடன் தொடர்பைத் துண்டித்து விட்டு, இரண்டு மணி நேரம் கழித்து தொடர்பு கொண்டான். அப்போதும் ஒருதடவை குரல்வழித்தகவல் சென்று மீண்டும் தொடர்பு கொண்ட போது நீண்ட நேர அழைப்பின் பின்னர் கடைசி நேரத்தில் "ஹலோ" என்று பதிலளித்தாள் கஸ்தூரி.

அரவிந்தன்: ஹலோ ... எத்தனை தடவை உங்களுக்கு கோல் பண்ணினேன். எல்லாமே வொயில் மெயிலில் தான் போகிறது..... போன் றிங் பண்ணினா ஆன்சர் பண்ணுறதில்லையா..?

சற்றே ஆவேசத்துடன் கேட்டான்.

கஸ்தூரி : இந்தப் போனில் சார்ஜ் இல்லை. என்னுடைய மற்றப் போனுக்கு றிங்      பண்ணுறீங்களோ... ? நான் அதில் கதைக்கிறேன் ...!

என்று சொல்லிவிட்டு, எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல் தொடர்பைத் துண்டித்த விட்டால் கஸ்தூரி.

அரவிந்தனோ கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான். பின்னர் தன் கோபத்தைத் தணிப்பதற்காக வெளியில் வென்று இயற்கைக் காற்று வாங்கி; வீட்டின் முன்னே இருந்த ; எதுவுமே அறியாத பச்சைக் குழந்தைகள் வெள்ளையாய்ச் சிரிப்பது போன்று கலர் கலராகப் பூத்துக் குலுங்கி; மெலிதாக வீசிய காற்றில் அலைபோன்று ஆடி அவனது முகத்தை வருடுவது போல் ஆடிய பூக்களை தனது கையால் வருடி; தனது ஆதங்கங்கள்; எரிச்சல்களை; கோபங்களை அந்தப் பூக்களுடன் பகிர்ந்து கொண்டான்.

ஆனால் அப்பூக்களோ எல்லாம் விளங்கியவை போன்று தம் இதழ்களை ஆட்டி சிரித்து அவனை பசுமைப் படுத்தியது.

அரைமணி நேரத்தின் பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டான் காயத்திரியை.

அரவிந்தன்: ட்றிங்...... ட்றிங்....

கஸ்தூரி : ட்றிங்..... ஹலோ..!

அரவிந்தன் : ஹலோ ... எப்படி இருக்குறீங்கள்?

கஸ்தூரி : காலை வணக்கம்..... நால் நல்லா இருக்கிறேன். நீங்கள் எப்படி?

அரவிந்தன்: ஏதோ இருக்கிறேன். இருண்டு போயிருக்கும் எதிர்காலத்தில்; குரங்கின் கையில் மாட்டிய பூமாலையாக ; அடுத்து என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில், உயிருள்ள பிணமாக அலைந்து கொண்டிருக்கிறேன்.

கஸ்தூரி : ஏன் அப்படிச் சொல்லுறீங்கள்......? நான் போன் எடுக்காததுக்கு வெரி சொறி.

நீங்கள் போன் பண்ணும் போது போனை காரில் வைத்து விட்டு கடைக்குச் சென்று விட்டேன்.

அரவிந்தன் : மொபைல் என்பது போகுமிடமெல்லாம் கொண்டு செல்வதற்குத் தானே?

அதை ஏன் காரில் விட்டு விட்டுச் சென்றீர்கள்?

கஸ்தூரி : நான் ஸ்கேட் போட்டிருந்தேன். அதில் பொக்கற் இல்லை. கையில் விற்பனைக்குரிய சாமான்கள் இருந்தது . அப்போ எப்படி அதைக் கொண்டு போவது..?

நிங்கள் தானே சொல்லியிருக்கிறீங்கள், போனை கையில் கொண்டு போக வேண்டாமென்று...?

" அரவிந்தன் அவளுக்கு முதல் ஒருமுறை சொல்லியிருந்தான். ஏனென்றால், ஒருமுறை அவளது போன்; அடையாள அட்டை; இன்னம் சில முக்கிய ஆவணங்கள்; பணம் என்பவற்றை தனது ஹாண்ட் பாக்கில் வைத்துக் கொண்டு சென்ற போது மோட்டார்ச்சைக்கிளில் வந்த திருடர்கள் அவளது ஹாண்ட் பாக்கைப் பறித்து எடுத்ததோடல்லாடமல்இ அவளை பக்கத்திலிருந்த கழிவு வாய்க்காலுக்குள் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

இவை அனைத்தும் கண் மூடி விழிக்கும் நேரத்தில் நடந்து விட்டது. அவளது தகப்பனார் பக்கத்தில் இருந்ததால் வீட்டுக்கு அவளைக் கூட்டி வந்து ஆறுதல் படுத்தினார்.

பின்னர் அரவிந்தனைத் தொடர்பு கொண்டு விடயத்தை அவனுக்கு சொன்ன போது அவன் " வெளியில் செல்லும் போது தேவையற்ற பொருட்கள்; முக்கியமான ஆவணங்கள்; தேவையில்லாமல் கூடிய அளவு பணம் என்பனவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் மொபைலை ஜீன்ஸ் பொக்கற்றினுள்ளும் வைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று அறிவுரை சொல்லியிருந்தான் அரவிந்தன்."

அரவிந்தன் :சரி சரி ... அடுத்த நேரங்களில் பொக்கற் உள்ள ஸ்கேட்டாகப் போடுங்கள். அல்லது ஜீன்சைப் போடுங்கள்.

கஸ்தூரி: எனக்கு ஸ்கேட் போடுபவது தான் விருப்பம். என்னிடமுள்ள ஸ்கேட் ஒன்றுக்கும் பொக்கற் இல்லை.

அரவிந்தன்.: சரி என்னவென்றாலும் போடுங்கோ... ஆனால் நான் தொடர்பு எடுக்கும் போது தொடர்பு இருந்தால் சரி.

கஸ்தூரி: இனி அப்படி ஒன்றும் நடக்காது. ... அயாம் வெரி சொறி வோ தற்.....!

அரவிந்தன்: இட்ஸ் ஓகே. சுகமாக இருங்கோ... நான் பின்னர் கோல் பண்ணுகிறேன். ...

ஓகே பாய்...

கஸ்தூரி : ஓகே.... பாய்.....!!

என்று அன்றைய உரையாடல் நிறைவு பெற்றது

Print this post

No comments: