Sunday, November 4, 2012

எமக்கு வாழ்வு கொடுங்கள்



எந்தனது மனைவியுடன் போன் பேசி

காலங்கள் கரைகிறது பல வாட்டி

பாலங்கள் இன்றி நான் தவிக்கின்றேன்

சாலங்கள் போட்டு அவளோடு சேர்ந்திருக்க



பெருங்கடல் ஒன்றெம்மைப் பிரிக்கிறது

சட்டங்கள் நாம்சேரத் தடுக்கிறது.

வருங்காலம் வாவென்று அழைக்கிறது

நேரங்கள் வருடங்களாய் பறக்கிறது.



துடித்தென்ன புரண்டென்ன கிடைக்கவில்லை

அடித்த அந்த சட்டத்தால் விடுதலையும்

உயர்நீதி மன்றத்தில் வழக்கிணைத்து

காலங்களும் மாதங்களாக ஆகிப்போச்சு



கால்கடுத்து கண்பூர்த்து களைத்துப்போனோம்

கரையில்லா தடுப்பினது விடுதலைக்காய்

அசையாத இதயங்கள் எங்குமுண்டோ

என்றெண்ணத் தோன்றுகிறது சிறையி(லி)ருந்து



ஈரநெஞ்சம் உள்ளஅன்பு இதயங்கள்கூடி

தூரதேசம் கடந்துவந்து உதயம்கேட்கும்

பாரமான எம்துன்பம் இறக்கிவைத்து

நேரமாக முந்தியெமக்கு வாழ்வு கொடுங்கள்.



வாழ்நாளில் முழுவதையும் உமக்களித்து

தாழ்பணிந்து உம்சட்ட வரைநடந்து

தோள்தூக்கி வலம்வருவோம் உலகினிலே

வேழ் ஆக நாமிருப்போம் இந் நாட்டினிலே.

Print this post

No comments: