நான்
கடைக்குப் போய்ச்சேரும்
வரைக்கும் முதலாளி கடைக்கு
வந்திடக் கூடாது....
அம்மாளாச்சி....
என்று
அம்மாளை வேண்டிக்கொண்டு
நேரத்தைப் பார்த்துப் பார்த்து
சைக்கிளை ஊண்டி விளக்கினான்
கார்த்திக்.
போகும்
வழியில் தன்னுடைய வயதுப்
பிள்ளைகளும் சைக்கிள் கரியலில்
மூட்டைக் கணக்கில் புத்தகங்களை
வைத்துக் கொண்டு போவதைப்
பார்த்துப் பெருமூச்சு
விட்டபடி நகரும் போது தான்
அவனது பழைய நினைவுகள்
எட்டிப்பார்க்கத் தொடங்கின.
அப்போது
அவனுக்கு வயது 13
தான்
ஆகியிருந்தது.
ஆண்டு
7
படித்துக்
கொண்டிருந்தான்.
படிப்பில்
நல்ல கெட்டிக்காரன்.
என்னத்தை
வகுப்பில் விளங்கப்படுத்தினாலும்
கற்பூரம் மாதிரி ஒரே தடவையில்
வேகமாகப் பற்றிக் கொள்ளுவான்.
இதனால்
வகுப்பாசிரியர் வசந்தா
ரீச்சருக்கும் தமிழ்-சமயச்
ரீச்சர் மிஸ்.நாகேந்திரராசாவுக்கும்
அவன் மீது நல்ல கெட்டிக்காரன்
என்ற அபிப்பிராயம் ஏற்பட்டதுடன்
அவன் மீது மிக்க அக்கறை
செலுத்தினார்கள்.
இதனால்
வசந்தா ரீச்சர் தனது மகள்
தாரணிக்கு எல்லாத்துக்கும்
கார்த்திக்கையே உதாரணம் காட்டி ,
"
அவனைப்
பார்......
அவன்
ஒரு கூலித்தொழிலாளியின்ர
மகன்.
ஆனால் அவன் வீட்டை போய் புத்தகம் திறந்து படிக்க வீட்டில் விளக்குக்கு எண்ணை இருக்குமோ தெரியாது.
ஆனால் பள்ளிக்கூடத்தில கெட்டிக்காரனாக இருக்கிறான்.
ஆனா உனக்கு எல்லா வசதிகள் இருந்த போதும்,
கேட்டுப்படிக்க ஆட்களிருந்தும்,
நீ ஒரு ரியூப் லைட் மாதிரி இருக்கிறாய்..."
என்று
எப்போதும் திட்டுவார்.
கணக்கில்
பிழை விட்டால் சில வேளை நல்ல
பூசையும் கொடுத்து விடுவார்.
இப்படி தாயரிடம் திட்டு வாங்கும் தாரணி இனி அம்மாவிடம் திட்டு வாங்கக் கூடாது என்று நினைத்து தீவிரமாகப் படிக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவளால் முடியவில்லை. "பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும் " என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும் தாயாரின் "படி படி " என்ற நச்சரிப்பை தடுக்க என்ன வழி என்று யோசித்து கடைசியில் தெரியாதவற்றை கார்த்திக்கிடமே கேட்டுப் படிப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.
இதனால் கார்த்திக்குடன் தேவையின்றிக் கதைக்காத தாரணி, சேர்ந்து பழகிக் கதைக்கத் தொடங்கினாள். கதைக்கும் போது தனக்கு தாயாரால் விழும் பேச்சுக்களையும் காரணத்தையும் சொல்லி கவலைப்படுவாள். ஒரு நாள் அவன் முன்னால் அழுதும் விட்டாள்.
என்ன செய்வதென்று தெரியாது தவித்த கார்த்திக்
"
இஞ்சருமப்பா
தாரணி,
நீர்
அழாதையும்...
நீர் குறை நினைக்கேல்லையெண்டா,
உமக்கு ஏதாவது டவுட் இருந்தால் என்னைக் கேளும்......
எனக்குத் தெரிஞ்சவரையில் சொல்லித் தாறேன். ….
ஒவ்வொரு அம்மாவுக்கும்,
தன் பிள்ளை நல்லா படிக்க வேணும் என்று தானே விரும்புவா .....
நீர் ஒன்றுக்கும் கவலைப்படாதையும்....
எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு இரும்......."
என்று
ஆறுதல் சொன்னான்.
இந்த ஆறுதல் வார்த்தைகள் தாரணிக்கு எப்போதும் எங்கும் கிடைத்ததில்லை. தனது வாழ்க்கை ஆறுதலற்ற ஒரு இயந்திர ரீதியாகவே அமைந்திருக்கிறது என்று பெருமூச்சு விட்டபடி தனது சட்டைக் கொலரினால் இரண்டு கண்களையும் துடைத்துவிட்டு அவனுக்கு முன்னால் அழுது விட்டதை நினைத்துவெட்கத்தில் அவனைப் பார்க்காமலேயே
"
வகுப்புக்குப்
போவம் வாரும்....."
என்று
இருவரும் சேர்ந்து வகுப்புக்குச்
சென்றார்கள்.
இதன் பின்னர் தாரணி தனது சந்தேகங்களை கார்த்திக்கிடம் கேட்கத் தொடங்கினாள். அவனும் அவற்றை எவ்வளவு சுலபமாக விளங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு சுலபமாக விளங்கப்படுத்தினான். அவன் மீதிருந்த அன்போ அல்லது அவன் விளங்கப்படுத்திய முறையோ என்னவோ தெரியவில்லை. தாரணிக்கு அவன் விளங்கப்படுத்தியது ஒவ்வொன்றும் பசுமரத்தில் ஆணியடித்தது போல் நன்றாகவே பதிந்தது. பரீட்சைகளிலும் வழமையை விட கூடுதல் புள்ளிகள் வாங்கத் தொடங்கினாள்.
இதனால் வசந்தா ரீச்சரும் தாரணியையும் கார்த்திக்கையும் வகுப்பில் பாராட்டிப் பேசத் தொடங்கினார். எல்லோருக்கும் முன்னால் இருவரையும் அழைத்து
"இவ்விருவரது
திறமைகளையும், கொள்கைகளையும்,
ஆர்வத்தையும்,
நீங்களும்
பின்பற்றி முன்னுக்கு வர
வேணும்.....
இது
தான் உங்கள் வகுப்பாசிரியர்
என்ற முறையில் உங்களிடம்
இருந்து நான் எதிர்பார்ப்பது.......இது தான் நீங்கள் படிப்பிக்கும் ஆசிரியருக்கு கொடுக்கும் மதிப்பு......,
மரியாதை.......,
தட்சணை எல்லாம்...."
என்று
மனமுருகிப் பேசினார்.
இப்படி அவர் பேசும் போது வகுப்பிலுள்ளவர்கள் தாரணி, கார்த்திக்கின் மீது பொறாமைப்பட்டு, அவர்களைக் குழி பறிப்பதற்காக நேரத்தைச் செலவு செய்தார்களேயொழிய, தம்மை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. ஆனால் வகுப்பறையில், எல்லோர் முன்னிலையிலும், தன்னை அம்மா பாராட்டும் போது, தாரணிக்கு, கார்த்திக் மீது மதிப்பும், ஒருவித எல்லை கடந்த பாசத்தையும் ஏற்படுத்தியது.
" நான் ஒரு மொக்காகத் தானே இருந்தேன்.
திடீர் திடீரென்று கட்டியணைத்துக் கொஞ்சுகிறார்.
முதலில் என்றால் வீட்டுக்குப் போனவுடன் படி படி என்று நச்சரிப்புத்தான்.
ஆனா இப்போ எங்க போனாலும் என்னைப் பற்றித் தான் கதைப்பார்.....
இதுக்கெல்லாம் காரணம் கார்த்திக்தானே....? "
என்று
தனது மனதினுள் நினைத்து,
தனக்குக் கிடைத்த பெருமைக்கும்,
மதிப்புக்கும்,
கார்த்திக்கே
காரணமென்று நம்பினாள்.
இதேபோல் தாரணி தன்னிடம் வந்து தனது துன்பங்களைச் சொல்லி அழுதது கார்த்திக்கும் அவள்மீது ஒரு அனுதாபத்தையும் போகப்போக ஒருவித பாசத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் வசந்தா ரீச்சருக்கு தலைநகரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பிரிவு நாளும் வந்தது. பிரியாவிடை என்ற பெயரில் ஒரு இழவு வீடு தான் நடந்தது என்று சொல்லலாம். ஏனெனில் 16 வருடமாக படிப்பிச்ச ரீச்சர் மாற்றலாகிப் போகிறார் என்று மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு விதமான பாச விடுப்பை ஏற்றுக் கொள்ள முடியாததால் ஆசிரியர் மாணவர் என்ற வேறுபாடின்றி அழுது கொண்டிருந்தார்கள்.
ஆனால் கார்த்திக்கும் தாரணியும் ஒருவருடைய கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தார்கள். பின்னர் தமது வகுப்படைக்குப் போய் தமது மேசைகளில் இருந்து பார்த்தார்கள். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து பலமாக அழுதார்கள். பின்னர் தாரணி சொன்னாள்,
"
கார்த்தி,
அம்மா
பள்ளிக்கூடம் மாறும் போது
என்னையும் சேர்த்து மாத்துவா
என்று நினைக்கேல்ல...
ஆனால் பள்ளிக்கூடம் மாறினாலும் எனது மனசு மாறாது......
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு...
நாங்க வளந்தாப்பிறகு ரெண்டு பேரும் தான் கலியாணம் செய்ய வேணும். ….
நான் உன்னைத் தான் கலியணம் பண்ணுவேன்......
உனக்கு என்னை பிடிச்சிருக்கா......?”
என்று
கேட்டாள்.
"
எனக்கும்
உன்னைத் தான் பிடிச்சிருக்கு......
ரெண்டு
பேரும் கலியாணம் செய்வோம்...."
என்று
சொல்லி தாரணியை மீண்டும்
இறுகக் கட்டிப்பிடித்து
அழுதவாறே
அவளது
கன்னத்திலும் நெற்றியிலும்
முத்தமிட்டான்.
பதிலுக்கு அவளும் முத்தமிட்டாள்.