Monday, February 18, 2013

"சக்தி இன்றேல் சிவம் இல்லை"



சிவன் தனது உடலில் பாதியை தனது மனைவியான உமையம்மைக்குக் கொடுத்தார்.

மனைவி என்பவள்; பெண் என்பவள் சக்தி  என்று பொருள். அதனால் தான் "சக்தி இன்றேல் சிவம் இல்லை" என்று சித்தர் ஒருவர் சொன்னார்.

அது தான் ஒரு ஆண் திருமணத்திற்கு முன்னர் ஒரு கட்டுக்கடங்காத காளையாக எப்படியெல்லாமோ இருப்பார்.

ஆனால் அவனுக்கென்று ஒரு பெண் நிச்சயிக்கப்பட்ட பின்னர் அந்த ஆணில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அதாவது சக்தியின்றி இருந்த ஒரு மனிதனுக்கு மனைவி; பெண் எனும் வடிவில் சக்தி கிடைக்கின்றது.

அந்த சக்தி, அந்த ஆணுக்கு ஒரு ஓர்மத்தை; நம்பிக்கையை; பலத்தை; திறமையை; வேகத்தை; விவேகத்தைக் கொடுக்கின்றது; கொடுக்க வேண்டும்.

இது மெய்ஞானத்தில் சொல்லப்பட்ட ஓர் அரிய உண்மை.

இந்த உண்மையின் தத்துவத்தை விளங்கிக் கொண்டவர்கள் நன்றாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் ஒரு ஆணினது வாழ்வில் சக்திக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் சக்தி இல்லை எனில், அந்த ஆணானவன் சக்தியற்ற வெறும் சடப்பொருளாகவே காணப் படுவான்.

இதனால் தானோ என்னவோ,
ஒரு ஆண் தனது சக்தியிடமிருந்து சக்தி கிடைக்காததால்,
இன்னொரு சக்தியைத் தேடிப் போகின்றான்....?????




Print this post

No comments: