Sunday, November 3, 2013

குடும்பத்துக்கா பணத்துக்கா முன்னுரிமை?

சுபா தனது திருமணத்திற்காக குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்திருந்தாள். அங்கு வந்ததும் முதல் வேலையாக எல்லோருக்கும் தொடர்பு கொண்டு தனது திருமண விபரத்தைத் தெரிவித்தாள்.

அவ்வாறே சாம்பவிக்கும் சுபா தொடர்பு கொண்டு, " எனது திருமணம் இன்னும் இரு நாட்களில் நடைபெற இருக்கிறது. சித்தப்பாவிடம் சொல்லி விடுங்கள் " என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

சுபா, சாம்பவியின் கணவரின் அண்ணனின் மகள் ஆவாள்.
ஆனாலும் சாம்பவி தனது வேலை அசதியால் உடனடியாகத் தன் கணவனிடம் சொல்லாவிட்டாலும் மறு நாள் சொல்லி விட்டாள்.

ஆனாலும் சுபாவினது தொடர்பிலக்கத்தை குறித்து வைக்கவோ அல்லது அவளது தொலைபேசியில் சேமித்து வைக்கவோ நினைக்கவில்லை. ஏனென்றால் குடும்பத்தினர் தானே... பின்னரும் தொடர்பு கொள்வார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு.

மென்மேலும் வந்த தொடர்புகளால் சுபாவினது இலக்கம் தொலைபேசியில் இருந்து மறைந்து போய்விட்டது. ஏனென்றால் கடைசியாக உள்வந்த தொடர்புகளுக்கான 10 இலக்கங்களே சேமித்து வைக்கக்கூடியவாறு தொலைபேசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் மறுபக்கம் சுபாவோ, சித்தியிடம் சொல்லிவிட்ட பின்னரும் திருமணமாகி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் சித்தப்பா தனக்கு தொடர்பு கொண்டு வாழ்த்தவில்லையே என்று கோபத்தில் இருந்தாள்.
அவளது தொடர்பிலக்கம் தொலைபேசியில் இருந்து அழிந்து விட்டது என்பதும் சாம்பவியின் கவலையீனத்தால் நடந்தது என்பதும் சுபாவுக்குத் தெரியாது.

ஆனால் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து வந்த தொடர்புக்கு விடையளித்து விட்ட சாம்பவி முதல் வேலையாக அவ் வாடிக்கையாளரின் தொடர்பிலக்கத்தை தொலைபேசியில் இருந்து எழுதி விட்டு இலக்கங்கள் சரியாக எழுதப்பட்டுள்ளதா என்று ஒவ்வொரு இலக்கமாக பார்த்து மீள உறுதிப்படுத்திய பின்னரே மறு வேலை பார்த்தாள்.

Print this post

No comments: