உந்தனது அரவணைப்பினிலே
உருள்கிறது என்னுலகம்
உன் கவனிப்பிலே
விரிகிறதென் தனியுலகம்
இவ்வுலகுக்கு எப்படி ஒரு சூரியனோ...?
இருள் கவிந்த இரவுக்கு எப்படியொரு சந்திரனோ?
அப்படியே
ஒரே ஒரு சூரியன்... ஒரே ஒரு சந்திரன்...
நீ எனக்கு...!
நீயில்லாமல் நானில்லை
உனது பிரதியாக இவ்வுலகில் வாழ்ந்து
உந்தனது கனவுகளை நனவாக்கி
உன் எண்ணத்தைப் பிரதிபலிப்பேன் நான்.
கடவுள் என்று சொல்லிப் பலர்
காணாத ஒன்றுக்கு கரம் குவிப்பர்
கண்கண்ட தெய்வம் தாயை
கடைக்கோடியில் தரம் பிரிப்பர்.
ஆறு அறிவு மனிதனுக்கென்று
அறிந்த பலர் சொன்னாலும்
சுருக்கிப்பலர் தமதறிவை
கருக்கிச் சரையில் வைத்திட்டார்.
நல்லது சொல்லி, தட்டித் திருத்தி
வளர்த்திடு என்னை வல்லவனாக - உன்
சொல்லது மீறா கட்டித் தங்கமாய்
உயர்ந்திடுவேன் இவ் வையகத்திலே...!!!