Tuesday, June 17, 2008

தவிர்த்துவிடு...!!!


புன்னகையொளி வீசுமுந்தன் வதனத்தில்
பொங்கியெழும் கோபம் ஏன்?
பொன்னகை மட்டும் ஜொலித்தால்
மதிப்பரோ யாரும் இவ்வுலகில்...?

கோபம் என்பது தற்காலிக பைத்தியம்
சொன்னவன் ஓர் ஆஸ்தான கவிஞன்.
புரிந்து கொண்டேன், அவன் சொன்னதில்
பொய் ஏதும் இல்லை என்பதை...!

தூக்கம் போல் நடித்து - என்னை
தூசாக நினைத்து வெறுத்தது,
தூக்கி வாரிப் போடுகின்றது - இரவெல்லாம்
தூக்கம் ஏதுமின்றி எனக்கு...!

தவிர்த்துவிடு இனிமேல் இந்த
உதிரியான கோபம், பிடிவாதங்களை,
மலர்ந்துவிடு, சூரியனைக்கண்ட தாமரை போல்
இதழெல்லாம் விரித்து, செக்கச்செவேலென...!

தவிர்க்காதே என்னை, தயவு செய்து..,
உதிர்ந்து விடுவேன் நான், வாடிய பூவாய்..
அது தான் உனது விருப்பமெனில்
உதிர்ந்து விடுகிறேன், விரைவில் வாடாமலேயே...!!!

Saturday, June 14, 2008

பெண்ணே கொதித்தெழு....!!!


பெண்ணே!
ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழினம் போல்
ஒடுங்கி நீ படுத்திருப்பது - பெண்களின்
ஒடுக்கு முறையை காட்டவா?

வீராப்பு பேசி, விடுகதை போடும்
வீரத் தலைவிகள், விடுதலை தருவார்கள் என்று
நம்பிக்கையுடன் இருக்கிறாயா?

எல்லாமே அவர்கள் போடும் அரசியல் நாடகம்,
அவர்களை நம்பினால்,
ஒடுக்கமாக இருந்தாலும்,
நிம்மதியாக் நித்திரை அடிக்கும் நீ,
குந்தியிருந்தும் குறட்டை அடிக்க முடியாத
நிலைக்கு,
தள்ளப்படுவாய் புரிந்து கொள்.

இனியும் யோசித்துப் பலனில்லை.
ஒடுக்குமுறையை உடைத்தெறிய கிளர்ந்தெழு..
உனது உரிமை பெற்றிட துள்ளியெழு..
வரும் பகை முடிக்க கொதித்தெழு....!!!

Tuesday, June 10, 2008

மன்னித்து விடு என்னை...!!!!


வாய் தவறி வந்த வார்த்தை
வம்புச்சண்டைக்கு வித்திட்டது..!
தும்பாகப் பறந்து போக- நீ
அம்பாகப் பாய்ந்திடு என்னுள்..!!

உன் ஆசை தீரும் வரை துளைத்திடு,
என் உடலை... தவிர எ(உ)ன் இதயத்தை..!
உன் அம்புக் கணைகள் பாய்ந்தால்,
தாங்காது என் காதல் இ(ம)தயம்...!!

சிரிக்கத் தெரிந்த நமக்கு
சிரிப்பு வர மறுப்பது ஏன்..??
சொல்லடி பெண்ணே..,,,!!

ஆத்திரம் என்பது அவசரத்தில் வரும்
மூத்திரம் மாதிரி... அடக்கினால் ஆபத்து...!
பைத்தியம் ஆகுமுன் கொட்டிவிடு நொடி பத்தில்,
வைத்தியம் கிடைக்கும் உன் வம்புகள் அனைத்திற்கும்...!!

எமக்குள் ஏன் சண்டைகள் , சச்சரவுகள்...?
நமக்குள் பேசி தீர்த்துக் கொண்டால்..,
அலையும் மனத்தின் கேள்விகளுக்கு - அன்று
காலையே வைக்கலாம் முற்றுப்புள்ளி...!!

மன்னித்து விடு என்னை..,
தனித்து விட்டு விடாதே...!
மரணித்து விடுவேன் நான்..
சத்தியமாய்.....!!!!!!

Friday, June 6, 2008

என் மனமே ஆறிவிடு.....!!!


அபலை இவள் நெஞ்சிலே
கவலைகள் ஆயிரம்....!
பின்னப்பட்ட வலைகளாய்
சிக்குப்பட்டு கிடக்கின்றன....!!

அந்த கவலைகளை சொல்லி
மற்றோர் தலையில் ஏற்றிவிட,
இடம் தரவில்லை என்மனம்,
தடுக்கிறது என் சுயநலம்....!!

என்கவலை, துன்பங்கள்..
என்னோடு போகட்டும்...!
யாருக்கும் வர வேண்டாம்,
என் துன்பங்கள் போன்று....!!

கவலைகளை நினைத்து
கண்ணீர் விட்டு அழுகின்றேன்...!
என் மனமே மாறிவிடு,
அனைத்தையும் மறந்து ஆறி விடு...!!

வரப்போகும் காலங்களில் - நீ
தரப்போகும் சந்தோசத்திற்காய்,
திறந்த மனதோடு பார்த்திருக்கின்றேன்
அந்த காலத்தின் நினைவுகளுக்காய்....!!!

Wednesday, June 4, 2008

காத்திருக்கிறேன் உனக்காக...!!!



பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீட்டுக்கு விளக்கேற்ற - என்னை
கூட்டிச்செல்ல வா.......!

அண்ணன், தங்கை பாசம் விடுத்து
மனைவி பிள்ளை என்று - என்னுடன்
உறவு கொண்டாட வா......!

மூன்று முடிச்சிட்டு
தாலிக்கயிறு கட்டி - என்னை
தாய்மையாக்கிட வா...!

சிவப்பு நிறப் பொட்டிட்டு
மனைவி ஸ்தானம் கொடுத்து - என்னை
அழைத்துச் செல்ல வா.....!

அம்மா, அப்பா என்று
பிள்ளைகள் கூப்பிட - எமது
வம்சம் பெருக்கிட வா.....!

அனைத்து செல்வங்களும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்ந்திட - நான்
காத்திருக்கிறேன் உனக்காக ஓடி வா....!!!