Showing posts with label திரையில் தெறித்தவை. Show all posts
Showing posts with label திரையில் தெறித்தவை. Show all posts

Monday, October 19, 2015

நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா?



ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையிலே ...

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?

ஒத்தையிலே ...

நமக்கென இருந்தோமே தினசை பிரிந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காற்றினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையிலே ....

Wednesday, September 30, 2015

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு..

வெள்ளை முளி வெளிய தெரிய
கள்ள முளி முளிக்கும் போது
என் உசிரு ஒடுங்குது
ஈரக்குல நடுங்குது....
 
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்கிற?
 
 

Friday, February 7, 2014

பளபளக்கிற பகலா நீ....???

 
எட்டித்தொடும் வயது இது
வெட்டுக்கத்தி போல் இருக்கும்
அதிசயம் என்னவென்றால் 
அதன் இருபக்கம் கூர் இருக்கும்....

கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்...

நாலு பக்கம் வா நீ
நீ ஏணி என்று காமி
அட இன்பம் மட்டும் சேர்த்து
ஒரு மூட்டை கட்டி வா நீ....!

Wednesday, December 4, 2013

மயக்கமா கலக்கமா....!


வந்த துன்பம்  எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

Wednesday, June 5, 2013

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

 யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணு நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே



Sunday, December 2, 2012

பணம் என்னடா பணம் பணம்


பணம் என்னடா பணம் பணம்

குணம் தானடா நிரந்தரம்


என்ன வழி நான் செய்வது

நல்ல வழி நான் செல்வது

இரக்க மனத்தைக் கெடுக்கும் அரக்கன்

பணம் பணம் பணம்.

Wednesday, October 10, 2012

திரையில் தெறித்தவை




மனிதன் மீது மண்ணுக்காசை

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது -அதை

மனம் தான் உணர மறுக்கிறது.
 
 
 
எட்டித் தொடும் வயது இது

ஒரு வெட்டுக்கத்தி போல் இருக்கும்

அதிசயம் என்னவென்றால் -அதன்

இரு பக்கமும் கூர் இருக்கும்

கனவுக்கு செயல் கொடுத்தால்

அந்த சூரியனில் செடி முளைக்கும்

புலன்களை அடக்கி வைத்தால் - தினம்

புதுப் புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி, உன் ஏணி என்று காமி

Thursday, September 27, 2012

திரையில் தெறித்தவை



மயக்கமா கலக்கமா

ஏழை மனதை மாளிகையக்கி


இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு


கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

மண்குடிசை வாசல் என்றால்


தென்றல் வர வெறுத்திடுமோ?

மாலை நிலா ஏழை என்றால்

வெளிச்சம் தர மறத்திடுமோ?