Tuesday, May 17, 2016

முள்ளிவாய்க்கால்



முள்ளிவாய்க்கால் 
முரண்டு பிடித்து சிங்களவன்
முழு உலகையும் திரட்டி வந்து 
கொத்து கொத்தாய் குண்டு போட்டு 
சின்னஞ் சிறிசு முதல்
பென்னம் பெரிசு வரை
உடல் குதறி
அங்கம் பிளந்து 
கொலை
படுகொலை செய்தான் 
எம் தமிழினத்தை...! 

எக்காளமிட்டு
கொக்கட்டமடித்து
பக்கத்து நாட்டை காக்கா பிடித்து
வக்கணையாக பக்கச் செய்திகளை 
சக்கையாக கசக்கி எறிந்து
மக்களின் கண்களுக்கு மண் தூவி விட்டு
வெட்கமின்றி வெற்றிக் கூத்தாடுகின்றார்
உயிரற்ற எம் உறவுகளின் குவியல்களின் மேல்
தூ......

தெரியவில்லை அவனுக்கு 
வெற்றி பெற்றது தமிழன் என்று...

உயிர் துறந்த ஒவ்வொரு தமிழனும் 
பயிர் அறுத்த விதை நெல்லாய்
காலம் பார்த்து காத்திருக்கின்றனர்
விதை முளைத்து
எம் வீரம் பரப்பி 
தமிழர் 
துயர் துடைப்பர் அவர். 

அதுவரை 
எம் நெஞ்சகலா உறவுகளே
நிம்மதியாய் உறங்குங்கள்
தமிழீழம் பிறக்கும்
தமிழர் கொடி பறக்கும்
எம் தமிழ் தேசத்தில்....!!

Wednesday, May 11, 2016

நீ எப்படி இருக்க வேண்டும்?




நீ எப்படி இருக்க வேண்டும்?

ஆனந்தவேதம் சொல்கிறது........ நீ நீயாக இரு...
°=°=°=°=°=°=°=°=°=°=

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் மனம் கொண்டு
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவரின் ஆசையில்
நீ சுகப்படாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கண் கொண்டு
உலகைப் பார்க்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கனவை
நீ காணாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் ஆசையை
உனதாக்கிக்கொள்ளாதே...
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வாழ்வை
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் சிந்தனை கொண்டு
நீ சிந்திக்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வழியை
உனதாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் / Happy Mother's day


Friday, January 15, 2016

Tuesday, December 22, 2015

கோடி உனக்கு வணக்கங்கள்


காலை வேளை எழுந்து வந்து, உனை நான் பார்க்கின்றேன்
சிறிய புன் சிரிப்புடனே, எனையாளும் ஈஸ்வரியே
கறுகறுத்த கண்மணியால், எனையாட்டும் சங்கரியே
கோடி கோடி வணக்கங்கள்.... கோடி உனக்கு முத்தங்கள்.....

நீலச் சேலை தனையுடுத்து..., சிங்காரமாய் சிகை அமைத்து...,
கை நிறைய வளையலிட்டு..., காது கனக்க கடுக்கன் தூக்கி...,
நெற்றி நடுவில் பொட்டு வைத்து..., கண்களை உற்று உருட்டிப்பார்த்து...,
சிலையாட்டம் நின்றுகொண்டு.., சுண்டியிழுத்துக் கொல்கின்றாய்.

உன் வதனம் பார்க்கையிலே.., ஒருகோடி ஆனந்தம்..,
ஊற்றுப் போலே பொங்குகிறது... இதயம் துள்ளிக் குதிக்கிறது...
மயிர்க்கூச்சிட்டு நிற்கிறது... மனதில் ஆர்வம் பொங்குகிறது...
பெரும் பேறு பெற்றேன் என்று, பெருமை கொள்ள வைக்கிறது.

நீலச்சாரி அம்மா என்று.. உனை ஆசையுடன் அழைக்கையிலே..,
சாலச்சிரிப்பை உதட்டிலிட்டு.. தென்றலாய் எனைத் தழுவுகின்றாய்.
வேலவனின் அழைப்புடனே, உனையணைத்துக் கொள்கின்றேன்.
பலகோடி ஆண்டுகள் உன்னுடன் பதினாறும் பெற்று வாழ்ந்திட..!

Wednesday, December 16, 2015

என்னை ஆட்சி செய்


என்னவளே
உன் முகம் பார்த்து
உன் கண்கள் பார்த்து
உன்னை என்னுள் இருத்தி
உறுதி எடுத்துக் கொள்கின்றேன்
என் தேவதையாக
என்றுமே நிரந்தரமாக....!

என்றும் என்  இனியவளே
உன் கண்மணியாடும் திசையில்
நான் ஆடுவேன்
குண்டூலம் போல்
என் இதயத்தின் துடிப்பாகி
என்னை ஆட்சி செய்...!

என் உடலோடு  உடலுரசி
உடம்பெல்லாம் சூடேத்தி
மெய்மறந்து என்னை
இறுக்கி அணைத்து
இம்சை செய்.....!

புன்னகையை முகத்திலிருத்தி
பூரண மலர்ச்சியுடன் - எம்
பெயர் சொல்ல உலகுக்கு
முத்தொன்று கொடுத்திடு
என்றுமே அவன் முதல்வனாக....!