Monday, July 6, 2009

என் வாழ்வின் ஆணிவேர்.


கடவுள் எனக்குத் தந்த கொடை
தடவியும் கிடைக்காத சொந்தப்படை- என்
கடவுச்சொல் வாழ்வில் வந்த விடை..!

நீ என் வாழ்வில் கிடைத்த வரம்
வாழ்வின் இசையில் அடிநாத சுரம்
எம் வாழ்வில் முதலான வலது கரம்..!

மனதினால் என்றென்றும் என்னைப்பார் -நீ என்
வாழ்வின் விருட்சத்தின் ஆணிவேர்
உலகினில் நிலைத்திடும் உந்தன் பேர்..!

எந்தன் வாழ்வில் நீ என் பெஸ்ட் பிறண்ட்
என்னுயிர் வெளிச்சத்திற்கு நீ தான் மஸ்ட் கரண்ட்
நான் என்றும் உன்னிடம் வந்து சரண்ட்..!

நான் நிலத்தில் நட்டு வைத்த பயிர்
நீ தான் இந்தப் பயிரின் உயிர்
நீ இல்லையேல் நான் வெறும் மயிர்.

நீதான் என் வாழ்வின் சோடி
ஓடி வந்து ஒரு முத்தம் தாடி
அதற்காக நான் தருவேன் பலகோடி.

ஏன் அப்படி அழுதாய்?

அன்புள்ளம் கொண்டவளுக்கு,
வணக்கம்.
நீ இங்கு நலம்
நீ விட்டுச்சென்ற கண்ணீர் தொடர்கிறது இன்றுவரை என்னுடன்….

ஏன் அப்படி அழுதாய்?
தாங்க முடியவில்லை எனக்கு…
இப்பவும் நீ அழுததை நினைத்தால் கண்கள் குளமாகி
உடைப்பெடுக்க தளம்புகின்றது.

அனுப்பும் போது அழவேண்டாம் என்று ஐயா
சொன்னதால் விடை பெறும் வேளையில் வேறு விடயங்கள் பேசி
என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

ஆனாலும் தொண்டை கனத்து மூக்கு சிந்தி குளமாகியது கண்கள்.

பாசமாகப் பழகி முப்பத்தாறு மாதங்கள் கடந்து விட்ட போதும்
நாமாக கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்ட எனக்கு
கட்டுப்படுத்த முடியவில்லை கண்ணீரை......

விரைவில் இருவரும் ஒருவராக வாழ்வோம்.

உனது அன்பும்,
இறை அருளும் இருந்தால்,
என்னை எதனாலும் அசைத்திட முடியாது.

வெற்றி வீரனாய்
வாழ்வின் உச்சியில்
நின்று வெற்றிக்கொடி நாட்டுவேன்.
இது சத்தியம்.

என்றென்றும் அன்புடன்
உன்னவன்.

Wednesday, October 1, 2008

இனிய ரமழான் வாழ்த்துக்கள்.

இன்று ரமழான் நோன்பு பெருநாளைக் கொண்டாடும்
அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கம் எமது
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Sunday, September 21, 2008

எளிமையான வாழ்க்கை வாழ்வோம்....!!!


நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்கள் வாழ வேண்டும்
என்று நினைப்பது உத்தமமான எண்ணம். அதேநேரம் ஆசையை
வளர்த்துக்கொண்டு போனால் ஆத்ம அபிவிருத்தி என்பதே இல்லாமல்
போய் விடும்.
சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி.
எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ அவ்வளவு
எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
விடயம்.
வயிற்றுக்கு உணவு ,மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளிய வீடு
இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும் பெறவேண்டும்.
இதற்கு மேல் ஆசை மேல் ஆசை தேவைக்கு மேல் தேவை என்று பறக்க
வேண்டியதில்லை.
நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்கு செய்யும்
மிகப்பெரிய பரோபகாரம்.
கிணற்றில்நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதி்ல்லை.
ஆனால் தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை
நம்மால் உணர முடிகின்றது.
எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரிய மரங்களை தண்ணீரில்
போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல்
நம்மை துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம் எனம் தண்ணீரில் ஆழந்து
விட வேண்டும்.
அப்போது துன்ப விடயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத்
தொடுவதே இல்லை.
நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரம லேசாகிவிடும்.

Sunday, September 14, 2008

விண்ணுயரப் பறந்த நட்பு....!!!

கிஞ்சித்தும் இரங்காமல்
வஞ்சித்து விட்டாய் - நீ
கெஞ்சிக் கேட்கிறேன்
தண்டித்து விடாதே...!

கண்ணிமைக்கும் நேரத்தில்
கருத்தோடிப் போனது
விண்ணுயரப் பறந்த நட்பு
வீணாகிப் போனது....!

விண்ணனானேன் உன்னால்
விரும்பிய துறையினில்
நன்றி உனக்கு சொல்வேன்
நாள் தோறும் என்வாயால்....!

கெட்டவனைத் தேடிய தர்மனுக்கும்
நல்லவனைத் தேடிய துரியோதனனுக்கும்
கடைசியி்ல் கிடைத்த பதில்
யாருமில்லை என்பது தான்....!

அவரவர் சிந்தனையோட்டத்திலேயே
கருத்துக்களை புரிந்து கொள்வர்
நல்லதாய் நினைத்தால் நல்லது
கெட்டதாய் நினைத்தால் கெட்டது....!

சந்தேகம் என்பது
செருப்பில் தைத்த முள் போல
எடுக்காது விட்டால்
குத்திக்கொண்டே இருக்கும் ....!

எடுத்துவிடு சந்தேகத்தை...!
தவிர்த்துவிடு தாழ்வு மனப்பான்மையை....!!
வளர்த்துவிடு சந்தோசத்தை.....!!!
கொடுத்துவிடு நட்புக்கு இலக்கணத்தை......!!!!