கஞ்சி குடித்தாலும்
வஞ்சி உன் மடியில்
தஞ்சமடைந்து படுத்திருந்தால்
பஞ்சமாகி விடும் கவலைகள்...!
கவலை என்பது மாரியில் கத்தும்
தவளை போல, மாதக் கடைசியில்
மடலைப் பார்க்கையில் வருத்தும்
விடலைக் குடும்பங்களுக்கு...!
படலை வரை வந்து தந்திடும் பொருட்கள்
தடையையும் மீறிய விலையாக இருக்கும்.
காலையில் எழுந்து சந்தை வரை போய் வந்தால்
கடைசியில் குறையும் எந்தையின் செலவு...!
வீண் பேச்சுப் பேசாது, அளந்து பேசிட்டால்,
வானளவு செலவு குறைத்து காலடியில் போட்டிடலாம்.
தேவையற்ற நேரங்களில் மின்னை தவிர்த்திட்டால்,
சேமிப்புக் கணக்கினிலே மீதியினை சேர்த்திடலாம்...!
பொதுப் போக்குவரத்தினை, தினமும் நீ பாவித்தால்
பாதிப் பணம் மீதியாகி, விஞ்சிவிடும் உன் சேமிப்பு.
சாதி மதம் பாராது அன்புடனே பழகிட்டால்
வீதியெல்லாம் சந்தோசத்தில், திளைத்துப் போய் வரலாம்...!
முயற்சி எடுத்து நீ - காலயில் சின்ன
பயிற்சி செய்திட்டால், ஒழிந்திடும் உன்
அழற்சி மற்றும் அனைத்துக் கொடிய நோய்களும்
பெயற்சி ஆகிவிடும் உனது மருத்துவச் செலவுகள்...!
கடையிலே சாப்பிட்டு உன்
உடை பெருத்துக் கொள்வதால்
வருகிறது இரட்டைச் செலவு.
தருகிறது வேதனையும் சோதனையும்....!
தவிர்த்திடு கடையினில் சாப்பாட்டினை,
சமைத்திடு வீட்டினில் சுவையோடு,
வளர்த்திடு உனது சேமிப்பினை,
பகைத்திடு வேண்டாச் செலவுகளை.....!!!
Saturday, June 28, 2008
வாழ்க தமிழ்......!!!

வாசமுள்ள எம்மவர் தமிழைக் காக்க,
பாசமுள்ள தமிழர் துள்ளி எழுந்து,
வேசமின்றி வரவேண்டும் முன்னுக்கு - இல்லையேல்
நாசமாகிப் போகும் நாம் கட்டிக் காத்த தமிழ்..
தோசமாகிவிடும் தமிழருக்கு.. வாழ்நாள் முழுதும்...!
காக்கவென, இப்போதே எழுந்து வராவிட்டால்
தாக்கப்பட்டு, சுக்கு நூறாகி விடும் எம் தமிழ்.
பார்க்கப் பார்க்க எரிச்சலாகும் - எம்
தாக்கப்பட்ட தமிழின் கலப்பை பார்க்கும் போதெல்லாம்...!
மறைவு தான், தமிழுக்கு விதியென்றால்
குறைவு தான் புத்தி, தமிழனுக்கு - விரைவில்
நிறைவு காண்பது அரிதாகும் தெரியுமோ?
பறைவதும் குறைந்து விடும் எம் தங்கத்தமிழில்..!
தரையில் ஊன்றிய காலைத் தூக்கி - உன்
கூரையில் வைத்து, உரக்கக் சொல்..,
பறையடித்துச் சொல், காக்க வா, தமிழை என்று,
விரைவில் சொல் தமிழ், வீழும் முன்னர்...!
மொழியின் முதன் மொழி, தமிழ் மொழி என்று,
வளிக்கு வளி, வாய் கிழியக் கத்தினால் போதாது,
அழிக்கத் துடிக்கும் அரக்கர் கூட்டங்களுக்கு,
பழியைத் தீர்த்து காப்பாற்று, எம்முயிர்த் தமிழை...!
உயிரினும் மேலான எம்முயிர்த் தமிழே...
பயிராய் நினைத்து வளர்க்கிறோம் உனை,
மயிராய் நினைத்து, யாரும் பிடுங்க நினைத்தால்
கயிறாய் ஆகி தூக்குவோம் அவர்களை...!
வாழ்க தமிழ்...! வளர்க தமிழ்...!
முதன் மொழியாக தமிழர்களுக்கு......,
பொது மொழியாக உலகத்தாருக்கு....!!!
Friday, June 27, 2008
சிகரட் பெட்டி

தனக்குத் தானே
தனது தலையில்
கொஞ்சம் கொஞ்சமாக
சேர்த்து வைக்கப்படும்
கொள்ளி நெருப்பு..!
தனது சேமிப்பினை
வைக்குமிடம் தெரியாது,
நுரையீரலுக்குள்
காற்றாக ஊதி
சேமிக்க உதவும்
துடுப்புக் கட்டை...!
இயற்கை மரணத்தை
எளிதிலே, விரைவாக
நோயுடன் கேட்டுப்
பெற உதவும்
தூதுவன்.....!!!
Monday, June 23, 2008
மனமுருகி வேண்டுகிறேன்.
வரும் மதி நிலவே - நீ
தரும் அன்புச் சுமைகளாலே
திடும் என பருக்கின்றேன்.
நீ தான் என் உலகமென்று
நினைத்துச் சுழன்றடிக்கின்றேன்.
நான் நினைத்தது சரியென்பதை
காட்டிவிட்டாய் உன் அணைப்பினிலே.
உனது அன்புக் கணைகள்
என்னிடம் கலகங்கள் செய்கின்றன.
தினம் தினம் ஏங்குகின்றேன்
கனம் பொருந்திய உனைப் பார்க்க.
முருகன், ஜேசு, அல்லாவிடம் - மனம்
உருகி வேண்டுகின்றேன்.
பருகிட உன் அன்பினை
தருமாறு என்னிடம் உன்னை.
எல்லோரது கதைகளும் - எனக்கு
எரிச்சலாக இருக்கிறது.
சினிமா பாடல்களும் - ஏனோ
இரைச்சலாக கேட்கிறது.
ஏன் தான் எனக்கு
இவ்வளவு சோதனைகள்?
அவ்வளவும் எனக்கு
தருகிறது வேதனைகள்.
வந்துவிடு என்னிடம்
வாழ்நாள் முழுவதும்.
தருகிறேன் உன்னிடம்
என்னையே முழுமையாக.
Sunday, June 22, 2008
வீறு கொண்டெழுவோம்...!!!
தலை தெறிக்க ஓடி
மலை ஏறித் தாண்டினாலும்
தடை தான் தமிழனுக்கு
தரணியிலே எப்போதும்.
துரத்தி துரத்தி அடிக்கிறார்,
குண்டு போட்டு துளைக்கிறார்.
பட்டினி போட்டு வதைக்கிறார்.
தூக்கிலிட்டு கொல்கிறார்.
இதை தட்டிக் கேட்க நாதியில்லை
சர்வதேசத்தின் மனச்சாட்சிக்கு,
சிறுவர் சேர்ப்பு, பணம் வசூலிப்பு என்று
பகட்டுக் கண்ணீர் வடிக்குது.
நடப்பதை அடக்க முனையும்
நலன் விரும்பிகள் அனைவரும்
படியுங்கள் ஏன் நடக்குது என்பதை
அளியுங்கள் நல்ல தீர்ப்பொன்றினை.
நலிந்தவன் எங்கிருக்கின்றானோ
பலிக்கடா அவனே தான்.
வலிந்து அவனை தாக்கிவிட்டு
வலியவன் நான் தான் என்று
மார்தட்டி கொள்கின்றார்.
வீரத்தமிழனுக்கு தமிழனே உதவி
ஒன்று சேர்ந்து தட்டுங்கள்
உங்கள் கைகளை பலமாக
ஓடுவான் எதிரி எம் ஊரை விட்டு.
நாடு தாண்டி வாழும் தமிழர்
வீடு தோண்டி புதைக்கும் வரை
பொறுத்திருந்தால் முடியாது.
வீறு கொண்டெழுவோம் - எம்
வேதனையை தீர்த்திட....
உரிமையை மீட்டிட.....
சுதந்திரம் பெற்றிட....
எம் தேசத்தை ஆண்டிட....!!!
Wednesday, June 18, 2008
கொடுத்துவிடு என்னிடம்...!!!

அன்பே!
கெஞ்சுகிறேன் உன்னிடம்,
கொஞ்சிவிடு என்னை,
இறுக அணைத்து....!
கொஞ்சலிலும் நீ
கஞ்சம் காட்டுகின்றாய்,
பஞ்சிப்படுகின்றாய்,
கொஞ்சம் தந்து விட...!
கொஞ்சலுக்கு உன்னிடம்
பஞ்சமா சொல்....?
வஞ்சிக்கிறாய் என்னை
கொஞ்சுவதில் நீ....!
வஞ்சிக் கொடியிவள் உன்னிடம்
தஞ்சம் அடைந்து விட்டாள்.
சிந்திக்காதே.. வந்துவிடு..,
மஞ்சத்தில் சந்திக்க....!
கொடுத்துவிடு உன்னை
முழுமையாக என்னிடம்,
வாழ்ந்திடுவேன் உன்னுடன்
என் வாழ் நாள் முழுவதிலும்...!!!