Tuesday, November 17, 2015

என்னுள் சில ஆசைகள்







 

என் இதயத்தில் குடியிருக்கும்,
என்னுயிர் தேவதையே....,
என்னுள் சில ஆசைகள்,
உன்னோடு நான் இருக்கையிலே....!

உந்தனது கை கோர்த்து,
ஒரு பெருந் தெருவினிலே,
அனைவரும பார்த்து ரசிக்க,
உலவி வர ஆசை.....!

உந்தனது மடியினிலே
என் தலை வைத்திருந்து
மணிக்கணக்கில் சிரித்துப் பேசி,
மனமாற ஆசை......!

நீ தூங்கி இருக்ககையிலே,
மங்கிய நிலவொளியினிலே,
உன் வதனம் பார்த்திருந்து,
உன் அழகை ரசிக்க ஆசை......!

தலை குளித்து வரும் உனக்கு,
உன்கேசம் துவட்டி விட்டு,
மண மணக்க அகல் போட்டு,
தலை வாரிப் பின்னி விட ஆசை.....!

நீ கொள்ளும் கோபத்தில்,
உன் கண்களும் உதடுகளும்,
சொல்லத் துடிக்கும் ஒவ்வொரு வரிகளையும்,
தெளிந்தறிய ஆசை......!

உன் கொஞ்சல் கதைகள் கேட்டு,
உன் சிணுங்கல் நுணுக்கம் அறிந்து,
உன் ஆசைகளை நிறைவேற்ற,
எப்போதும் ஆசையோ ஆசை....!

உன் கண்ணோடு கண் சேர்த்து,
உன் இதயம் சொல்லும் வார்த்தைகளை,
அர்த்தம் பிசகாது அறிந்து கொண்டு,
ஓராயிரம் ஆண்டுகள் உன்னோடு வாழ ஆசை.....!


Wednesday, November 4, 2015

நடிப்பா...?


Monday, October 19, 2015

நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா?



ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையிலே ...

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?

ஒத்தையிலே ...

நமக்கென இருந்தோமே தினசை பிரிந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காற்றினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையிலே ....

Wednesday, September 30, 2015

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு..

வெள்ளை முளி வெளிய தெரிய
கள்ள முளி முளிக்கும் போது
என் உசிரு ஒடுங்குது
ஈரக்குல நடுங்குது....
 
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்கிற?
 
 

Wednesday, March 11, 2015

இனிமையே வா வா


மாலை விளக்கேற்றும் நேரம், மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம், தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ
இனிமையே வா வா
 
 
 

 

Wednesday, December 24, 2014

Merry Christmas