மறுநாள்
எழுந்து குளித்து வெளிக்கிட்டு
தாரணியை எப்படிச் சமாளிப்பது
என்று யோசித்தவாறு 9
மணியளவில்
பள்ளிக்கூடத்திற்கு வந்து
சேர்ந்தான்.
அதற்கு
முன்னரே தாரணி அங்கு வந்து
காத்திருந்தாள்.
கார்த்திக்கைக்
கண்டதும் எழுந்திருந்தாள்.
அவன்
தனது பழைய வகுப்பினுள் வந்து,
முன்னர்
இருந்த இடத்தில் இருந்த போது,
அவனருகில்
வந்த தாரணி,
அவனது
கை மேல் தன் கை வைத்து கண்
கலங்கினாள்.
அவள்
கண் கலங்கியதும்,
கார்த்திக்கும்
கண் கலங்கி விட்டது.
கண்களைத்
துடைத்தவாறே தாரணி துவக்கினாள்,
"
கார்த்தி,
எமது
பழைய அன்பையும்,
நினைவுகளையும்
நினைத்து,
அதிலிருந்து
ஒரு முடிவுக்கு வருவதற்காகத்
தான்,
உங்களை
பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னேன்.
நான்
விட்டுக்கு வந்த போது,
குடும்பச்சுமை,
பொறுப்பு
என்று பெரிய கதை எல்லாம்
கதைச்சீங்கள்.
ஆனாலும்,
நீங்கள்
என்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி
பாத்ததை கவனிச்சன்.
அதிலிருந்து,
உங்களுக்கும்
என்மேல இருந்த காதல் குறையேல்லஎண்டு
தெரிஞ்சு கொண்டேன்.
அதை
விட,
அங்க
உங்கட அப்பாவுக்கு முன்னால
கதைக்கச் சங்கடப் பட்டதையும்
பார்த்தன்.
அது
தான் இஞ்சை வரச்சொன்னேன்.....
இந்த
இடம் உங்களுக்கு என்னத்தை
ஞாபகப்படுத்துகிறது...
சொல்லுங்கோ
பாப்பம்.......?
எனக்கு
நினைவுக்கு வருவதெல்லாம்,
நீங்க
இந்தஇடத்தில,
என்னைக்
கட்டிப்பிடிச்சு முத்தம்
குடுத்ததும்
அதற்குப்
பதிலாக நான் உங்களுக்குக்
குடுத்ததும் தான் ஞாபகம்
வருகுது...."
என்று
வாய் ஓயாது தனது நினைவுகளை
சொல்லிக்கொண்டே போனாள்.
கார்த்திக்
எதுவும் பேசவில்லை,
கேட்டுக்கொண்டே
இருந்தான்.
அதனால்
தாரணியே தொடர்ந்து பேசினாள்.
"
நான்
வரும் போது உங்களுக்குக்
காட்ட வேணுமெண்டு என்ரை
றிப்போட் எடுத்துக் கொண்டு
வந்தனான்.
இதைப்
பாருங்கோ...
நான்
இப்ப கணிதத்தில் 99
மாகஸ்
எடுத்திருக்கிறேன்.
அதுக்கு
நீங்கள் தானே காரணம்.
அந்த
மாமரத்துக்குக் கீழ் இருந்து,
நீங்க
எனக்குச் சொன்ன ஆறுதல்
வார்த்தைகளும் அதன் பின்னர்
நீங்கள் என்மீது எடுத்துக்கொண்ட
அக்கறையும் தானே காரணம்.
எனது
ஏக்கங்களையும்,
வலிகளையும்
சுமந்து தள்ளாடிய போது,
அவற்றைக்
குறைக்கும் சுமைதாங்கியாக,
நீங்கள்
இருந்தது தான்,
என்னை
இந்த நிலைக்கு உயர்த்தி
விட்டிருக்கிறது.
அதன்
பின்னர் கிடைத்த பெருமையும்,
புகழ்ச்சியும்
என்னை மேலும் உயர வைத்தது.
அதை
விட,
அதன்
பின்னர்,
எனது
குடும்பத்திடம் இருந்து
கிடைத்த பரிவு தான் பிரதான
காரணமாக இருந்தது.
இதற்கெல்லாம்
அடிப்படையாக இருந்தது நீங்கள்
தானே.
....."
என்று
பெருமூச்சு விட்டாள் தாரணி.
இப்போ
கார்த்திக் கதைக்கத் தொடங்கினான்.
"
தாரணி
.... !
இவற்றையெல்லாம்
நீ சொல்லும் போது எனக்கு
ஆறுதலாகவும் சந்தோசமாகவும்
தான் இருக்கிறது.




