சங்கடங்கள், ஏனடி பெண்ணே..?
அந்தரங்கம், ஏதுமில்லை நமக்குள்,
அந்தரமின்றி, ஆறுதலாக வாடி - நீ
தந்த முத்தங்கள், இனிக்கிறது இப்போதும்...!
தாலி கட்டி உனை சொந்தமாக்கிட்டேன்,
வேலி போட்டு வைக்காதே - ஆசைகளுக்கு,
போலி ஆக்கிடாதே - என் இதயக் கனவுகளை,
கோலிக் கொடு, இரு பிள்ளைக் கனிகளை...!
சாவி வைத்து, அடக்கிப் பூட்டி,
பாவியாய், என்னை தவிக்க வைக்கிறாய்.
வாலி போல எனக்கு, தெரியாது கவியெழுத,
காலி தான் ஆக்கலாம், பல பியர் டின்களை..!
காதல் மகா ராணியாக்கி - என்
சாதல் வரை காத்திருப்பேன்.
மோதல் ஏதுமின்றி சேர்ந்திரு - என்
வாழல் காலம் வரையும்....!
கொடுத்திட்டேன், என்னுயிரை உன்னிடம்,
தடுத்திட்டேன், என் ஆணவம் திமிரெல்லாம்.
வெறுத்திட்டேன், எனக்கென்றிருந்த ஆசைகளை,
எடுத்திட்டேன் முடிவு, உனக்காக வாழ்வதென்று...!
தட்சணையாக, கொடுக்கிறேன் என்னை,
வஞ்சனையின்றி, கொடுத்திடு உன்னை,
பஞ்சணை மீது, கட்டி, எனை அணைத்து,
முத்தங்கள் கொடு, நான் முழுமையாக வாழ....!!!
Sunday, July 6, 2008
Saturday, July 5, 2008
அலை ஆடை ஏனோ...??
உள்ளங்கை வரை, சுருங்கிய உலகினில்,
தொடை வரை சுருங்கிய, ஆடை அணிந்து,
படை எடுக்கும் பெண்களை - நீ
தடை விதிக்கச் சொல்லவா - இந்த,
அலை ஆடை அணிந்துள்ளாய்...?
அரை குறை, ஆடை அணிந்து,
அரை வரை, தெரியும் வகையில்,
தரையிலே, நடந்து வந்து,
சிதைக்கிறீர், எம் இளையவர் நெஞ்சை,
விதைக்கிறீர், அவர் நெஞ்சில் நஞ்சை..!
நாகரீக வளர்ச்சியில், இது அற்ப ஆசையாய்,
மேகமாய் சூழ்ந்துள்ள, ஒரு கொடிய நோய்,
வேகம் கொண்டு, பெற்றோர் திருத்தாவிட்டால்,
மோசமாகிவிடும், நாட்டில் குற்றங்களெல்லாம்,
நாசமாகிவிடும், இளையவரின் வருங்காலமெலாம்..!
ஒருவன், ஒன்றைச் செய்தால் - அதை
நீயும், செய்து காட்டு.
அதை விடுத்து, தடுக்க முயலாதே...
இது தான், கருத்துச் சுதந்திரமாம்...!
பிழையாக விளங்கிய சிலர் - இதை
சுளையாக பயன்படுத்தி, கெடுக்கின்றார்..
வளையாத, நற்குணம் கொண்டோரும்,
சளையாது இறங்குகின்றார், களத்தில்...!
"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது ..."
என்பது போல்
பெண்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால்,
நாட்டில் குற்றங்களை தடுக்க முடியாது...!!!
Friday, July 4, 2008
கொடுத்திடு விடை...!!
அன்புள்ள என் துணைக்கு,
நம்முள்ளத்தின் இணைப்பிற்கு,
உன்னுள்ளத்தின் வெளிப்பாடு தான்
என்னுள்ளத்தை ஈர்த்திழுத்தது....!
பார்த்துள்ள உன் கண்களுக்கு,
முன்னுள்ள நான் - தூண்களுக்குப்
பின்னுள்ள மறைவில், ஒளிகிறேன்
உன்னுள்ள, ஊடுருவல் பார்வையினால்...!
முகம் பார்த்து, முழுமையும் பேசி,
அகம் அறிந்து, அன்பினால் கூடி,
சதம் வருடங்கள் ஒன்று கூடி,
விதம் விதமாய், வாழ்ந்திடணும்....!
மிருதுவான உன், அணைப்பினால்,
சாதுவான நான், கட்டுண்டேன்.
பாதுகாக்க, நீ உள்ளாய் என்பதால்
சூது இன்றி தந்தேன், உன்னிடம்...!
பூராவும் நான், உனக்குத் தான்,
வேராக இருந்து, காத்திடு எனை,
நாராக கட்டுவேன், உனை என் அன்பினால்,
பாராளும் மன்னனும், வியக்கும் வகையில்...!
வேரோடி, உலகெல்லாம், விழுதெறிந்து,
பாராளும் வகையில், இரு மன்னர்கள் பெற்று ,
தாலாட்டி, சீராட்டி, அன்போடு வளர்த்து - அவர்கள்
பேயோட்ட வேண்டும், எம்மக்கள் துன்பம் தீர...!
கொடுத்திடு, விடை எனக்கு..,
தகர்த்திடு, தடை உனக்கு...,
தடுத்திடு, தனிமையை எனக்கு....,
வளர்த்திடு, அன்பு உறவினை எமக்குள்....!!!
Thursday, July 3, 2008
உனக்காக உயிர் வாழ்வேன்....!!!
புரிந்து கொள்கிறேன் நான் - என்மீது
எரிந்து விழும் உன்மீது தவறு இல்லை என்பதை,
சரிந்து விடுவேன் நான் என்ற பரிதாபத்தில்
பரிந்து பேசிய உன்னை வெறுக்கவில்லை நான்...!
எதையும் விட்டுக் கொடுக்கும் பெண் - தன்
"அதையும்" விட்டுக் கொடுக்க வருவாளோ சொல்..
சதையும் கதையும் தான் வாழ்க்கையா?
அசையா நம்பிக்கையும், அன்பும், பாசமும் தானே...!
இதை நீ சொல்லி - என்னிடம்
பதை பதைத்து பேசிய போது - நான் ஒரு
கதை கதைக்கவில்லை. அத்தனையும் எனக்கு நீ
விதைக்கும் விதை என்று ஏற்றுக்கொண்டேன்...!
நொந்து நீ சலித்து விடாதே..
வெந்து வெந்து நான் கருகி விடுவேன்.
பந்து போல் நாம் உலகெலாம் உருண்டோடி
வந்து காட்டுவோம், எமது வெற்றிக் கனிகளை...!
அன்று நான் உன்னிடம் சொன்னது போல்
இன்றும் உன்னிடம் திரும்பவும் சொல்கிறேன்,
என்றும் உனக்காக உயிர் வாழ்வேன் - வாழ்விலே
வென்றும் காட்டுவேன் உன் இலட்சியப் படி...!!!
Wednesday, July 2, 2008
உன்னைச் சரணடைந்தேன்...!!
புலர்ந்த காலைப் பொழுதினிலே,
உலர்ந்த வண்ண ஆடை அணிந்து,
மலர்ந்த செந்தாமரை போல்,
எழுந்து வந்த என் மங்கையே...!
பரந்த உன் வட்ட, முகத்தினிலே,
அரைத்த கஸ்தூரி மஞ்சள் பூசி,
சிறுத்த உன் நெற்றி நடுவில்,
கறுத்த நிறப்பொட்டு, வைத்தவளே...!
கண்ணிமைக்கு மையிட்டு,
உதட்டுக்கு சாயம் பூசி,
அதட்டும் உன்னிரு கண்களாலே,
மிரட்டி விடும் அழகரசியே...!
வாரி இழுத்து, பின்னலிட்டு,
கொத்தாக மல்லிகைப் பூச்சூடி,
தங்கக் கலரில், பட்டுச்சேலை கட்டி,
காட்சியளிக்கும் லட்சுமி தேவியே...!
பொன் நகை தவிர்த்து,
புன்னகை புரிந்து,
அன்பினால் ஆட்கொண்டிடும்,
புன்னகை அரசியே...!
வீட்டுக்கு வந்தோரை,
விருந்தோம்பி உபசரித்து,
வருந்தாமல் வழியனுப்பும்
அருந்ததி, வடிவுக்கரசியே.....!
சுட்டுவிரல் காட்டி, உன்னிடம்
மட்டுமே சொல்கின்றேன்..
சரணடைந்தேன் நான் - எனது
மரணம் வரை உன்னிடம்...!!!
வேசம் போடும் உறவுகள்....!!!

பாசம் போல நடித்து
வேசம் போடும் உறவுகள்
காயம் ஆன பின்னர் தான்
மாயம் ஆவர் அதிலிருந்து..!
வாசம் பிடித்து வந்து
நாசம் ஆக்குவர் நண்பரை,
தோஷம் பிடித்தது போல
சுற்றுவர் எமையெல்லாம்....!
நியாயம் பேசிப் பேசி
அநியாயம் செய்வர் கூடி,
தாடி வைத்து தம்மை
விடிவெள்ளி தாம்தான் என்பர்...!
பற்றி எரியுது பட்டினியில் வயிறு
பெற்றவன் மனசும் கல்லாய் ஆகுது,
தொற்றி இருப்பவன் தொண்டை வரை போட்டு
தொந்தி பெருத்து வதந்தி பரப்புறான்..!
சாபம் என்பது சும்மா இல்லை.
சோகம் அத்தனையையும் - நீ பெறப்போகும்,
பாவம் என்பதை அறியாதவனா சொல்..?
காலன் வந்து உன்னை கட்டையில் ஏற்ற...!
திட்டித் திட்டி தீயிலடித்து செய்கிறோம் சத்தியம்,
கட்டிய வேட்டியுமின்றி தூள் தூளாவாய் நிச்சயம்,
பட்டி தொட்டி எங்கும் பதுங்கியுள்ள படைகள்
வட்டி போட்டு கொடுப்பர் முதலுடன் சேர்த்து...!
கதறி அழும் சின்னஞ் சிறார்களை நினைத்துப் பாரும்,
நிச்சயமாய் அத்தனையும் நீர் செய்த கொடுமைகள்,
அவர்களின் கண்ணீரில் திரண்டு வந்த சுனாமி,
சுழற்றியடித்து சுக்கு நூறாக்கியிருக்கிறது பாரும்...!
கதை கதையாய் உலகெல்லாம் அளந்து,
பதை பதைக்க வைத்த, பதர்கள் நீங்கள்..,
விதையாய் விதைக்கப்பட்ட வித்துக்கள் - எம்மால்
சதை சதையாய்ப் போனீர் நீர் - ஒரு நொடியில்.....!!!