
11 மணியாகியும் மாக்கற்றுக்கு போன மனிசன
இவ்வளவு நேரமாக காணோம்.....
என அலுத்துக்கொண்ட பரிமளம் வாசலை எட்டிப்பார்த்தாள்.
பாதையில் மாலினி ரீச்சர் நடந்து போவதை கண்டவள்...,
"ரீச்சர்.... ரீச்சர்... இஞ்சை ஒருக்கா பாருங்கோ.....
நான் இஞ்சினியர் தர்சினியின்ர அம்மா... ரீச்சர்...."
தன்னை யாரோ கூப்பிடுவது போல இருக்கவே
திரும்பிப்பார்த்த ரீச்சர்..,
பரிமளத்தை கண்டு - கிட்ட வந்து -
"ஓ... நீங்களா? எப்படி இருக்குறீங்க....தர்சினி எப்படி இருக்குறாள்...?
" நாங்கள் நல்லா தான் இருக்கிறம். தர்சினிக்கும் என்ன குறை......
வாங்க ரீச்சர் - ரீ குடிச்சிட்டு போகலாம்..."
என்ற பரிமளம் வீட்டுக்குள் கூட்டிச்சென்று உட்கார வைத்தாள்.
"ரீச்சர்.. கூலா...? ஹொட்டா.... குடிக்குறீங்க..."
"வெய்யில் கண்ண எரிக்குது..
கூலா இருந்தா குடுங்க.. நல்லா இருக்கும்..."
ரீச்சருக்கு வண் மினிற் சொன்ன பரிமளம்
வேலைக்காரிக்கு ஓடர் போட்டாள்...
"கலா.... தர்சினியின்ர ரீச்சர் வந்திருக்கிறா...
நல்ல கூலா fresh apple juice எடுத்திட்டு வா..
அத்தோட ப்றிஜ்ஜில கேக்கும் இருக்கு - எடுத்திட்டு வா..."
"சொறி ரீச்சர்.. தர்சினியின்ர அல்பம் பார்க்குறீங்களோ..?"
"ஓமோம் குடுங்க.. அவளையும் பார்த்து கன காலம் ஆச்சுது..."
பரிமளத்திடம் அல்பத்தை வாங்கி பார்த்த ரீச்சர்...
"ஓ முதல் மாதிரி நல்ல ஸ்லிம்மாகவே இருக்கிறாள்...
இது ஆர் பெடியன்..."
என்று தர்சினியுடன் நெருக்கமாக இருந்தவனை காட்டி கேட்டா
"ஓ இதுவா...
இவர் தர்சினியோட வேலை செய்யிறவராம்...
தமிழன் தான்..
ஆனால் தமிழ் பேச வராது...
தமிங்கிலிஷ் தான்....
எங்கயாவது ஒரு சொல்லு போட்டு
காலங்களை மாத்தி மாத்தி
ஏதோ ஒரு மாதிரி தான் சொல்லுவார்.





